ஆதார் கார்டு மிக முக்கிய அடையாள அட்டையாகும். வங்கி பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் வரை அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் தனிநபருக்கு ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. அதில் தனித்துவ அடையாள எண், போட்டோ, வீட்டு முகவரி உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதோடு மொபைல் எண்ணும் இணைக்கப்படும்.
இந்நிலையில் உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் மாற்றப்பட வேண்டும் என்றால் அதை UIDAI இணையதளம் மூலம் ஆன்லைனில் எளிதாக செய்யலாம். ஸ்டெப்-பை ஸ்டெப் ஆக இதை செய்யுங்கள்.
- UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் www.uidai.gov.in செல்லவும்.
2. முகப் பக்கத்தில் “Get Aadhaar” என்று கொடுத்து “Book Appointment.” என்ற ஆப்ஷனை கொடுக்கவும்.
3. இப்போது உங்கள் நகரம், இருப்பிடத்தை உள்ளிட்டவும்.
4. அடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், கேப்ட்சாவை கொடுக்கவும். ஓ.டி.பி Generate செய்யவும்.
5. ஓ.டி.பி உள்ளிட்டவுடன் புதிய பக்கத்தில் ஆதார் எண், உங்கள் பெயர் மற்றும் அருகில் உள்ள ஆதார் சேவா கேந்திரா மையத்தை செலக்ட் செய்யவும்.
6. அடுத்தாக “Mobile Number Update” என்ற சேவையை கிளிக் செய்யவும்.
7. இப்போது ஆதார் சேவா கேந்திரா மையத்தில் உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் தேதி, நேரத்தை குறிப்பிடவும்.
8. சேவை கட்டணமாக ரூ.50-ஐ ஆன்லைனில் செலுத்தவும்.
9. அடுத்து Acknowledgement slip மற்றும் Update Request Number (URN) வரும். அதை வைத்து உங்கள் மொபைல் எண் மாற்று கோரிக்கையை தெரிந்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“