மொபைல் போதும்... ஆதாரில் வீட்டு முகவரியை மாற்றலாம்; இப்படி செய்யுங்க

ஆதார் அட்டையில் வீட்டு முகவரி மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

ஆதார் அட்டையில் வீட்டு முகவரி மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Aadhaar and Pan

ஆதார் மிக முக்கிய அடையாள அட்டையாகும். வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதாரில் தனித்துவ அடையாள எண், புகைப்படம், பெயர், முகவரி உள்ளிட்டவை இருக்கும். இந்நிலையில், ஆதார் அட்டையில் வீட்டு முகவரி மாற்ற வேண்டும் என்றால் அதை எளிதாக ஆன்லைனில் செய்யலாம். 

Advertisment

மொபைல் போன் மூலமே இதை செய்யலாம். அதற்கு, 

1.  மொபைல் போன் எடுத்து அதில் கூகுள் பக்கம் செய்து My Aadhaar uidai gov என டைப் செய்து செல்லவும். 
2.  ஆதார் பக்கம் லாக்கின் செய்யவும். 
3.  அடுத்து Address Update என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
4.  அதன் பின், Address Update Online ஆப்ஷன் கொடுத்து Proceed to update aadhaaar கொடுக்கவும்.
5.  இப்போது Address என்ற ஆப்ஷனை கொடுத்து உள்செல்லவும். 
6.  Details to be updated என்ற இடத்தில் உங்கள் புதிய முகவரியை உள்ளிடவும். 
7. அடுத்தாக புதிய முகவரியை வெரிஃவை செய்ய ஆவணத்தை இணைக்க வேண்டும். Manual upload கொடுத்து ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். 

8.  அதன் பின் சேவை கட்டணமாக ரூ.50 ஆன்லைனில் செலுத்த வேண்டும். 
9. இதன் பிறகு புதிய முகவரி  உடன் ஆதார் அட்டைபோஸ்ட் மூலம் அனுப்பபடும்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: