Advertisment

ஆதார் அப்டேட் ஆன்லைன்: போன் நம்பர், முகவரி, பிறந்த தேதி மாற்றுவது எப்படி?

ஆன்லைன் மூலம் ஆதார் கார்டில் போன் நம்பர், முகவரி, பிறந்த தேதி மாற்றுவது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aadhaar- Voter Id linking

Aadhaar card updates

ஆதார் மிக முக்கிய அடையாள அட்டையாகும். வங்கி பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் வரை அனைத்திற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் அட்டையில் தனித்துவ அடையாள எண், உங்கள் பெயர், போட்டோ, முகவரி, பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். ஆதாருடன் போன் நம்பர் இணைக்கப் பட வேண்டும். இந்தநிலையில் உங்கள் ஆதாரில் போன் நம்பர், முகவரி, பிறந்த தேதி எதாவது மாற்றம் இருந்தால் அதை எவ்வாறு ஆன்லைன் மூலம் எளிதாக செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment
  1. UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். https://uidai.gov.in/ இணையப்பக்கத்திற்கு சென்று

    "My Aadhaar" டேப்பின் கீழ் "Update Aadhaar" ஆப்ஷனைக் கொடுக்க வேண்டும்.
  2. அடுத்து அதே ஆப்ஷனின் கீழ உள்ள "Update Demographics Data Online" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  3. இப்போது உங்கள் ஆதார் எண் மற்றும் ஸ்கிரீனில் வரும் security code பதிவிட வேண்டும். அதைக் கொடுத்தப் பின் "Send OTP" ஆப்ஷனை கிளிக் செய்யவும். அனுப்பபட்ட ஓ.டி.பியை பதிவிடவும்.
  4. ஓ.டி.பியை பதிவிட்டவின் "Login" பட்டனை கொடுக்கவும்.
  5. இப்போது நீங்கள் எந்த பிரிவை அப்பேட் செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது முகவரி, போன் நம்பர், பெயர் என எதை மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும். அதேசமயம் பல்வேறு பிரிவுகளையும் ஒரே நேரத்தில் அப்பேட் செய்யலாம்.
  6. நீங்கள் எந்த பிரிவை மாற்றுகிறீர்களோ அதற்கான ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும். உதாரணமாக, உங்கள் முகவரியைப் புதுப்பிக்க விரும்பினால், பில், வங்கி அறிக்கை அல்லது பாஸ்போர்ட் போன்ற முகவரிக்கான ஆதாரங்களை அப்லோடு செய்ய வேண்டும்.
  7. இப்போது, நீங்கள் குறிப்பிட்ட விவரங்கள், அப்லோடு செய்த ஆவணங்களை சரி பார்த்து "Submit" பட்டனைக் கொடுக்கவும்.
  8. திரையில் வருகிற BPO சர்வீஸ் பிரோவைடாரை தேர்ந்தெடுக்கவும். BPO சர்வீஸ் பிரோவைர்ஸ் UIDAI-யால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் அப்பேட் சேவை வழங்குபவர்கள் ஆவர்.
  9. அப்டேட் உறுதி செய்து மீண்டும் "Submit" பட்டனைக் கிளிக் செய்யவும்.
  10. இப்போது உங்களுக்கு unique Update Request Number (URN)நம்பர் அனுப்பபடும். இதை வைத்து உங்கள் அப்பேட் குறித்தான ஸ்டேட்ஸ் டிராக் செய்து கொள்ளலாம்.
Aadhaar Card Aadhar Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment