ரயில்வேயின் புதிய விதிகள் படி ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு வரை கூட பயணிகள் தங்களுடைய போர்டிங் ஸ்டேஷனை மாற்றும் வசதியை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. முன்பு இது 24மணி நேரமாக இருந்தது.
அதாவது போர்டிங் ஸ்டேஷன் மாற்ற வேண்டும் என்றால் ரயில் புறப்படுவதற்கு 24மணி நேரத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். இப்போது இது மாற்றப்பட்டுள்ளது.
போர்டிங் ஸ்டேஷனை எப்படி மாற்றுவது?
1. முதலில் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான irctc.co.in-க்கு செல்ல வேண்டும்.
2. அடுத்து உங்கள் லாக்கின் ஐ.டி, பாஸ்வோர்ட் போட்டு உள்ளே செல்லவும்.
3. My Account > My Transactions > Booked Ticket History செல்லவும்.
4. இங்கே ‘Change Boarding Point’ ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.
5. இப்போது அந்த ரயில் நின்று செல்லும் ஸ்டேஷன் பற்றிய பட்டியல் காண்பிக்கப்படும். இதில் நீங்கள் எந்த ரயில் நிலையத்திற்கு மாற்ற வேண்டும் என்பதை குறிப்பிடவும்.
6. இதன் பின் ஓகே எனக் கிளிக் செய்யவும்.
7. உங்கள் மொபைல் எண்ணிற்கு போர்டிங் ஸ்டேஷன் மாற்றப்பட்டது குறித்து மெசேஜ் வரும்.