/indian-express-tamil/media/media_files/2025/04/25/6KSnbBMdZr0pxitz61YX.jpg)
இன்றைய சூழலில் பெரும்பாலானவர்கள் பான் கார்ட் வைத்திருக்கின்றனர். நம்முடைய அனைத்து விவரங்களையும் சரியாக கொடுத்தாலும், சில சமயத்தில் பெயர் அல்லது பிறந்த தேதி போன்றவை தவறாக இருக்கும்.
இவ்வாறு பான் கார்டில் பிறந்த தேதி மற்றும் பெயர் ஆகியவை தவறாக இருந்தால், அதனை சரி செய்ய அலுவலகங்களுக்கு செல்லும் போது ரூ. 110 கட்டணமாக வசூலிக்கின்றனர். ஆனால், வீட்டில் இருந்தபடியே 5 நிமிடங்களில் ரூ. 50 செலவு செய்து இதில் திருத்தம் செய்யலாம்.
இதற்காக, பான் சர்வீஸ் போர்ட்டலின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இதில் அப்ளை ஃபார் சேஞ்ச் ஆர் கரெக்ஷன் இன் பான் கார்ட் (Apply for change or correction in pan card) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இப்போது, டிஜிட்டல் பேப்பர்லெஸ் என்ற பாக்ஸை டிக் செய்ய வேண்டும். இதையடுத்து, பேன் கார்டின் எண்ணை பதிவிட வேண்டும். இனி, அந்த தளத்தில் நம்மை பற்றி கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் சரியாக கொடுக்க வேண்டும்.
மேலும், அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னர், ரூ. 50 செலுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் குறியீட்டு எண் கொடுக்கப்படும். அதன் மூலமாக பான் கார்ட் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இப்படி செய்யும் போது 15 முதல் 20 நாட்களில் பான் கார்ட் வீட்டிற்கு வரும்.
எனவே, அலுவலகங்களுக்கு சென்று பான் கார்டில் திருத்தம் செய்ய வேண்டும் என்று இல்லாமல் வீட்டில் இருந்தபடி நாமே எளிதாக செய்ய முடியும். இதற்கான பணமும் குறைவாக செலவாகும்.
நன்றி - Boss Wallah (Tamil) Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.