How to Change Gmail Password Tamil News : உங்கள் ஜிமெயில் கடவுச்சொல்லை மாற்ற விரும்புகிறீர்களா? ஆனால், அதன் அமைப்புகளைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? கவலையே வேண்டாம். இந்த எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தினாலே போதும். நீங்கள் நினைத்ததை விட இது எளிதானது. தனிப்பட்ட அல்லது உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக நிறையப் பேர் ஜிமெயிலைப் பயன்படுத்துவதால், ஒவ்வொரு மாதமும் கடவுச்சொல்லை மாற்றுவதன் மூலம் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். உங்கள் தரவு அல்லது தொடர்புகள் அனைத்தும் தொலைந்து போவதை நீங்கள் விரும்பாததால், பயனர்கள் ஒவ்வொரு கணக்கிற்கும் வெவ்வேறு கடவுச்சொற்களை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காற்புள்ளிகள், சதவிகித அறிகுறிகள், மேல் எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள் மற்றும் எண்கள் போன்ற சிறப்பு எழுத்துக்களை உள்ளடக்கிய கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும். எந்தவொரு சாதனத்திலும் உங்கள் கணக்கில் உள்நுழையும்போதெல்லாம், கணக்குச் செயல்பாட்டைச் சரிபார்க்க கூகுள் எப்போதும் உங்களுக்குத் தெரிவிக்கும்.
எந்தவிதமான சலனமும் இல்லாமல், மொபைல் அல்லது டெஸ்க்டாப்பில் உங்கள் ஜிமெயில் கணக்கின் கடவுச்சொல்லை எவ்வாறு மாற்றலாம் என்பதைப் பார்ப்போம்.
மொபைலில் ஜிமெயில் கடவுச்சொல்லை மாற்றுவது எப்படி
How to change gmail password in tamil
ஸ்டெப் 1: உங்கள் தொலைபேசியில் ஜிமெயில் பயன்பாட்டைத் திறந்து அமைப்புகளைப் பார்வையிட்டு உங்கள் மின்னஞ்சல் ஐடியில் அழுத்தவும்.
How to change gmail password steps
ஸ்டெப் 2: 'உங்கள் கூகுள் கணக்கை நிர்வகி' என்பதை க்ளிக் செய்யம்.
How to change gmail password tamil steps
ஸ்டெப் 3: மேலே உள்ள பாதுகாப்பு பிரிவுக்குச் செல்லவும்.
How to change gmail password explained in tamil
ஸ்டெப் 4: இப்போது, “கூகுள் உள்நுழைக” விருப்பத்தின் கீழ், கடவுச்சொல்லை க்ளிக் செய்யவும். உங்கள் கணக்கில் உள்நுழையுமாறு கேட்கப்படுவீர்கள்.
ஸ்டெப் 5: உள்நுழைந்த பிறகு, உங்கள் புதிய கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும், பின்னர் கடவுச்சொல்லை மாற்று என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
டெஸ்க்டாப்பில் ஜிமெயில் கடவுச்சொல்லை மாற்றுவது எப்படி
ஸ்டெப் 1: உங்கள் கணினியில் ஜிமெயிலைத் திறந்து, மேல்-வலது மூலையில் அமைந்துள்ள உங்கள் சுயவிவரத்தைக் க்ளிக் செய்க. உங்கள் பெயரின் முதல் எழுத்து இருக்கும் வட்ட ஐகானை அழுத்த வேண்டும். பின்னர், 'உங்கள் கூகுள் கணக்கை நிர்வகி' என்பதைக் க்ளிக் செய்க.
ஸ்டெப் 2: “பாதுகாப்பு” என்பதன் கீழ், கூகுள் உள்நுழைவதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: கடவுச்சொல்லைத் தேர்வுசெய்க. பிறகு நீங்கள் உள்நுழைய வேண்டும்.
ஸ்டெப் 4: உங்கள் புதிய கடவுச்சொல்லை உள்ளிட்டு, கடவுச்சொல்லை மாற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"