தொலைதூர பயணங்களுக்கு பலரும் ரயில் சேவையை நம்பியிருக்கிறார்கள். காரணம் குறைந்த விலை, தேவையான வசதிகளில் உள்ளன. இந்நிலையில், சில நேரங்களில் ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு சில காரணங்களால் பயணிக்க முடியாமல் ஆகிவிடுகிறது.
இந்த நிலையில், முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மற்றொரு பயணிக்கு மாற்ற ரயிலில் வசதி உள்ளது. இதற்கு முதலில் இந்தக் கோரிக்கையை நீங்கள் 24 மணி நேரத்துக்கு முன்னதாக வைக்க வேண்டும்.
முதலில் நீங்கள் ரயில் நிலையம் செல்ல வேண்டும். அங்கு உங்களின் ஆதார், பான்கார்டு மற்றும் டிக்கெட் உள்ளிட்ட விவரங்களை அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும்.
அவர் எளிதாக உங்களின் டிக்கெட்டை மற்றொரு பயணிக்கு மாற்றிவிடுவார். இது காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிக்கு உதவியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“