How to change media settings on whatsapp Tamil News : ஒவ்வொரு சாட்டிலும் மீடியா அமைப்புகளை மாற்ற வாட்ஸ்அப் உங்களை அனுமதிக்கிறது. எல்லா சாட்களுக்கும் நீங்கள் மீடியா அமைப்புகளை மாற்றலாம் அல்லது சாட்களுக்கான தானாகப் பதிவிறக்க விருப்பத்தை ஆஃப் செய்யலாம். இயல்பாக, நீங்கள் ஒரு மீடியா ஃபைலை பதிவிறக்கும் போது, அது தானாகவே உங்கள் தொலைபேசியின் கேலரியில் சேமிக்கப்படும். இது இட பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
மீடியா தெரிவுநிலை விருப்பம் இயல்பாகவே ஆஃப் செய்யப்படும். இந்த அம்சம் புதிய மீடியாவை மட்டுமே பாதிக்கிறது. வாட்ஸ்அப்பில் மீடியா அமைப்புகளை எவ்வாறு மாற்றலாம் என்பது பற்றி மேலும் அறிய படிக்கவும்.
வாட்ஸ்அப்பில் தானாகப் பதிவிறக்கம் செய்வது எப்படி?
இந்த செய்தியிடல் செயலியில் நீங்கள் பெறும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வாட்ஸ்அப் தானாகவே பதிவிறக்கம் செய்ய விரும்பவில்லை என்றால், அதை மாற்றலாம். முதலில் அமைப்புகள் பகுதியைப் பார்வையிட வேண்டும். பின்னர் ‘சேமிப்பிடம் மற்றும் தரவு’ விருப்பத்திற்குச் செல்ல வேண்டும்.
“மொபைல் டேட்டாவை பயன்படுத்தும் போது” என்று ஒரு விருப்பம் உள்ளது, அதை க்ளிக் செய்து, புகைப்படங்கள், ஆடியோ, வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் ஆப்ஷன்களை டிக் செய்யவும். அது முடிந்ததும், எல்லா புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது மற்ற ஃபைல்கள் தானாகவே பதிவிறக்கம் செய்யப்படாது. பதிவிறக்க பட்டனை க்ளிக் செய்தால் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும்.
உங்கள் மொபைல் டேட்டாவை பயன்படுத்தும்போது மட்டுமே இந்த அமைப்பு செயல்படும். வைஃபைக்கும் அதே அமைப்புகளை நீங்கள் விரும்பினால், ‘வைஃபை-ல் இணைக்கப்படும்போது’ விருப்பத்தில் உள்ள அனைத்தையும் தேர்வு நீக்கம் செய்யலாம்.
ஒவ்வொரு சாட்டிலும் ‘மீடியா தெரிவுநிலை’ அமைப்புகளை எவ்வாறு மாற்றுவது?
ஒவ்வொரு சாட்டிலும் மீடியா தெரிவுநிலை அமைப்புகளை மாற்றக் கூட வாட்ஸ்அப் உங்களை அனுமதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட குழு அல்லது சாட்டிலிருந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பார்க்க விரும்பவில்லை என்றால், நீங்கள் அதை மாற்றி உங்கள் தொலைபேசியில் சில சேமிப்பிடத்தை சேமிக்கலாம். யாருடைய சுயவிவரத்திற்கும் சென்றாலும், மீடியா தெரிவுநிலை விருப்பத்தைக் காண்பீர்கள். அதை க்ளிக் செய்து, ‘வேண்டாம்’ விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
வாட்ஸ்அப்பில் இயல்புநிலை மீடியா அமைப்புகளை எவ்வாறு காண்பது / மாற்றுவது?
எல்லா சாட்களுக்கும் ஒரே மீடியா அமைப்பை நீங்கள் வைத்திருக்க விரும்பினால், அதை அமைப்புகள் பிரிவில் மாற்றலாம். அமைப்புகள் பகுதியைத் திறந்ததும், ‘சாட்களை’ கண்டுபிடித்து அதை க்ளிக் செய்யவும். அதன் பிறகு, மீடியா தெரிவுநிலை விருப்பத்தை முடக்கவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil