உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்ற வேண்டும் என்றால் அதை எளிதாக செய்யலாம். இதற்காக வங்கிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக 10 நிமிடத்தில் செய்து முடிக்கலாம். இங்கே எஸ்.பி.ஐ வங்கி பயனர்கள் தங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்துப் பார்ப்போம்.
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) இந்தியாவின் மிகவும் பிரபலமான அரசு வங்கிகளில் ஒன்றாகும். ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. அந்த வகையில் இன்டர்நெட் பேங்கிங் மூலம் எஸ்.பி.ஐ வங்கி கணக்கின் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.
- www.onlinesbi.com என்ற அதிகாரப்பூர்வ எஸ்பிஐ இணையதளத்திற்கு செல்லவும்.
2. பக்கத்தின் இடது பேனலில் உள்ள My Accounts செக்ஷனில் Profile-Personal Details-Change mobile No. என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது இங்கு அக்கவுண்ட் நம்பர், பெயர், மொபைல் எண், இ-மெயில் உள்ளிட்டவை காண்பிக்கப்படும்.
4. அதில் மொபைல் எண்ணை தேர்ந்தெடுத்து ஓ.டி.பி வெரிவிக்கேஷன் செய்து பின் புதிய நம்பரை உள்ளிட்டு மாற்றலாம்.
5. இப்போது உங்களுக்கு மொபைல் எண் மாற்றம் குறித்த எஸ்.எம்.எஸ் அனுப்பபடும். ஓரிரு நாட்களில் உங்களுடைய புதிய எண்ணிற்கு உங்கள் அக்கவுண்ட் இணைக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“