பான் கார்டு மிக முக்கிய ஆவணமாகும். குறிப்பாக வருமான வரி, வங்கி கணக்கு சேவை உள்ளிட்ட பணிகளுக்கு பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. 18 வயது நிறைவடைந்தவர்கள் பான் கார்டு பெறலாம். வரி செலுத்துதல், வரி திரும்பப் பெறுதல் மற்றும் வருமான வரித் துறையிலிருந்து பிற முக்கியத் தகவல் பெறுவதற்கு பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது.
ஆன்லைனில் பான் கார்டு மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி?
1. முதலில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.pan.uttitsl.com என்ற தளத்திற்கு செல்லவும்.
2. அங்கு சென்ற பின் பான் கார்டு திருத்தம் என்ற ஆப்ஷனை தேடவும்.
3. பான் கார்டு திருத்தப் பக்கம் சென்று ஆன்லைன் திருத்தம் என்ற ஆப்ஷனை கொடுக்கவும்.
4. ஆன்லைன் திருத்தம் கே.ஒய்.சி அடிப்படை என்பதை கொடுத்து உங்கள் பான் கார்டு எண் கொடுத்து என்டர் கொடுக்கவும்.
5. இப்போது பான் அட்டை திருத்தப் படிவம் ஓபன் செய்யப்படும்.
6. அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து Address Proof மற்றும் பிற ஆவணங்கள் கொடுக்கவும்.
7. இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபடும்.
8. இதை கொடுத்த பின், பான் அட்டையில் நீங்கள் மொபைல் எண்ணை மாற்றலாம்.
9. இதை செய்த பின் உங்களுக்கு மொபைல் எண்ணை மாற்றத்திற்கான உறுதி மெசேஜ் அனுப்பபடும். ஒரு வாரத்தில் மொபைல் எண் மாற்றப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“