ஆதார் மிக முக்கிய அடையாள அட்டையாகும். வங்கி பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் வரை அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதாரில் 12 இலக்க பிரத்தியேக எண், உங்கள் பெயர், புகைப்படம், பிறந்த தேதி, வீட்டு முகவரி என முக்கிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதோடு உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட வேண்டும். ஆதார் பல்வேறு துறை பயன்பாட்டிற்கும் பயன்படுத்துகிறோம் என்பதால் ஆதாரில் மொபைல் எண் இணைப்பது அவசியமாகிறது. அந்த வகையில் ஆதாரில் உங்கள் பழைய மொபைல் எண்ணை அப்டேட் செய்வது அல்லது புதியதாக மொபைல் எண் இணைப்பது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
இந்தநிலையில் UIDAI சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், ஆன்லைனில் ஆதார் அப்டேட்களை இலவமாக மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. 2023, ஜுன் 12-வரை கட்டணம் ஏதும் இல்லாமல் திருத்தங்களை இலவசமாக செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மொபைல் எண் தொடர்பான திருத்தங்களுக்கு ஆன்லைனில் சேவை இல்லை. அருகில் உள்ள இ-சேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டும்.
ஆதாரில் போன் நம்பர் மாற்றுவது/ புதிதாக சேர்ப்பது எப்படி?
- உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். uidai.gov.in. என்ற பக்கத்திற்கு சென்று "Locate Enrolment Center" கிளிக் செய்து உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையத்தை அறிந்து கொள்ளலாம்.
- மையத்திற்கு சென்ற பின் மொபைல் எண் மாற்ற/ புதிதாக சேர்க்க இ-சேவை மைய நிர்வாகி படிவம் ஒன்றை வழங்குவார். அதை பூர்த்தி செய்ய வேண்டும்.
- விவரங்களை சரிபார்த்து படிவத்தை மைய நிர்வாகியிடம் ஒப்படைக்க வேண்டும்.
- இதற்கு சேவை கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும்.
- பணம் செலுத்தியப் பின், மைய நிர்வாகி இதற்கான Update Request Number (URN) எண் உங்களுக்கு வழங்குவார்.
- URN எண் கொண்டு மொபைல் எண் அப்டேட் குறித்த ஸ்டேட்டஸை அறிந்து கொள்ளலாம்.
- myaadhaar.uidai.gov.in/ என்ற பக்கத்திற்கு சென்று Check Enrolment & Update Status சென்று உங்கள் URN எண் மற்றும் கேப்ட்சா கொடுத்து ஸ்டேட்டஸை அறியலாம்.
- அதிகபட்சமாக 90 நாட்களுக்குள் உங்கள் மொபைல் எண் அப்டேட் ஆகிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.