உங்கள் எஸ்.பி.ஐ வங்கி கணக்கை வேறொரு கிளைக்கு மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இது ரொம்ப சிம்பிள் நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்லாமல் ஆன்லைனிலேயே எளிதாக மாற்றலாம். எஸ்.பி.ஐ-ன் அதிகாரப்பூர்வ YONO ஆப் மூலமாகவும் செய்யலாம்.
ஆன்லைனில் எஸ்.பி.ஐ வழியாக மாற்றுவது
1. முதலில் எஸ்.பி.ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு செல்லவும். https://www.onlinesbi.sbi/personal/ பக்கத்திற்கு செல்லவும்.
2. உங்கள் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்டு லாக்கின் செய்யவும்.
3. மேலே மெனு பாரில் "e-Services" டேப் கிளிக் செய்யவும்.
4. "Transfer of Savings Account" என்ற ஆப்ஷனை கொடுக்கவும்.
5. உங்கள் எந்த அக்கவுண்டை மாற்ற வேண்டும் என்பதை செலக்ட் செய்யவும்.
6. எந்த கிளைக்கு உங்கள் அக்கவுண்டை மாற்ற வேண்டுமோ அந்த கிளையின் branch code உள்ளிடவும்.
7. தகவல்களை சரிபார்த்து "Submit" கொடுக்கவும்.
8. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபடும்.
9. அதை கொடுத்து "Confirm" கிளிக் செய்யவும்.
10. இப்போது உங்கள் மொபைல் எண்ணிற்கு Acknowledgement மெசேஜ் அனுப்பபடும்.
YONO செயலி வழியாக மாற்றுவது
- முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் YONO SBI செயலி டவுன்லோடு செய்யவும்.
2. அடுத்து செயலி ஓபன்செய்து லாக்கின் செய்யவும்.
3. "Services" ஆப்ஷன் செலக்ட் செய்யவும்.
4. அடுத்து "Transfer of Savings Account" ஆப்ஷன் கொடுக்கவும்.
5. இப்போது எந்த அக்கவுண்டை மாற்ற வேண்டும் என்பதை செலக்ட் செய்யவும்.
6. எந்த கிளைக்கு உங்கள் அக்கவுண்டை மாற்ற வேண்டுமோ அந்த கிளையின் branch code உள்ளிடவும்.
7. தகவல்களை சரிபார்த்து "Submit" கொடுக்கவும்.
8. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபடும்
9. ஓ.டி.பி உள்ளிட்டு "Confirm" கிளிக் செய்யவும்.
10. உங்கள் கிளை மாற்ற பதிவு குறித்து உங்கள் மொபைல் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பபடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“