Advertisment

நெருங்கும் தேர்தல்; வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றுவது எப்படி? ஆன்லைனில் இப்படி செய்யலாம்

ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம்/ திருத்தம் ஆகியவற்றை செய்யலாம்.

author-image
WebDesk
New Update
 voter ID .jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையில் சில திருத்தங்களை ஆன்லைனில் செய்ய  அனுமதிக்கிறது. வாக்காளர் அடையாள அட்டையில் வசிப்பிட முகவரியை புதுப்பித்தல், மாற்றுதல் ஆகியவற்றையும் ஆன்லைனில் செய்யலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் (https://voters.eci.gov.in/.) தேசிய வாக்காளர் சேவை இணையதளத்தில் 'படிவம் 8'-ஐ நிரப்பு முகவரி மாற்றத்தை எளிதாக செய்யலாம். 

Advertisment

ஆன்லைனில்  வாக்காளர் அட்டை முகவரி மாற்றுவது எப்படி? 

1.  இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கம் சென்று மொபைல் எண், இ-மெயில் கொடுத்து லாக்-கின் செய்யவும். 

2.  அடுத்து ஹோம் ஸ்கிரீன் பக்கத்தில் உள்ள Form 8 ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

3.  இப்போது “Shifting of residence/correction of entries in existing electoral roll/replacement of EPIC/marking of PwD” என்ற ஆப்ஷனுடன்  Form 8 படிவம் இருக்கும். அதில் Form 8 ஐகான் கிளிக் செய்யவும். 

4.  அடுத்த பக்கத்தில்  “Application for” என்ற ஆப்ஷன் செலக்ட் செய்து “Self” என்று கொடுக்கவும். இது வரவில்லை என்றால்  “Others” என்ற ஆப்ஷன் கொடுங்கள். இப்போது EPIC number என்டர் செய்ய கேட்கும். இது உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணாகும். 

5. அடுத்து முகவரி மாற்றத்திற்கான ஆப்ஷன் கேட்கும். இதில் நீங்கள் “உங்கள் தொகுதிக்குள் மாற்ற வேண்டுமா அல்லது  தொகுதி வெளியில் மாற்ற வேண்டுமா“ என்று கேட்கும். இதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

6. இப்போது Form 8 படிவம் 3 செக்ஷன் கொண்டது. இதை அனைத்தையும் நிரப்ப வேண்டும். 

செக்ஷன் A- இதில் எந்த மாநிலம், மாவட்டம், மக்களவைy/ சட்டமன்ற தொகுதி விவரங்கள் கேட்கப்படும். 

செக்ஷன் B-  உங்கள் பெயர் உள்பட தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படும். 

செக்ஷன் C-  இங்கு பழைய விவரங்கள் சரிபார்த்து,  இங்கு உங்களுடைய மாற்று முகவரி விவரங்கள கொடுக்க வேண்டும். அதோடு இதற்கு தேவையான ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும். 

செக்ஷன் D- உங்கள் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து  Declaration கொடுக்க வேண்டும். 

செக்ஷன் E-  படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். 

புதிய முகவரிக்கான ஆவணமாக நீங்கள் அந்த முகவரியில் எடுத்த நீர்/மின்சாரம் கட்டண பில் கொடுக்கலாம். ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், இந்தியா பாஸ்போர்ட் ஆகியவற்றையும் கொடுக்கலாம். 

7. படிவத்தை நிரப்பிய உடன் மீண்டும் ஒரு முறை செக் செய்து “Preview and Submit”  பட்டன் கொடுக்கவும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

 

 

VoterID
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment