/tamil-ie/media/media_files/uploads/2023/03/pan-aadhaar-link-fees.jpg)
PAN-Aadhaar linking
ஆதார்- பான் கார்டு இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஜூன் 30-ம் தேதிக்குள் ஆதார்- பான் இணைக்கப்பட வேண்டும். இந்தநிலையில் உங்கள் பான் கார்டில் திருத்தம் இருந்தால் அதை சரி செய்த பின் தான் இணைக்க முடியும். அந்த வகையில் உங்கள் ஆதார் எண் வைத்தே ஆன்லைனில் உங்கள் பான் கார்டின் முகவரி மாற்றலாம். அதை எவ்வாறு செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
- முதலில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளமான UTI Infrastructure Technology and Service Ltd தளத்திற்கு செல்ல வேண்டும்.
- அங்கு பயனரின் பான் எண், ஆதார் எண், இ-மெயில் ஐ.டி, மொபைல் எண் பதிவிட வேண்டும்.
- ஆதார் கொண்டு பான் கார்டு முகவரி மாற்ற வேண்டும் என்றால் 'Aadhaar Base e-KYC Address Update' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது கேப்ட்சா கோடை பதிவிட்டு, Terms and conditions ஆப்ஷனுக்கு பதிலளிக்கவும்.
- Submit பட்டனை கொடுக்கவும்.
- அடுத்ததாக, உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட இ-மெயில் ஐ.டி மற்றும் மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி (OTP) அனுப்பபடும்.
- இதைப் பதிவிட்டு மீண்டும் ‘Submit’ கொடுக்கவும்.
அவ்வளவு தான் பான் கார்டு முகவரி மாற்றம் தொடர்பான விவரங்கள் உங்கள் மொபைல் எண் மற்றும் இ-மெயில் ஐ.டி-க்கு அனுப்பபடும். 90 நாட்களுக்குள் உங்களுக்கு புதிய பான் கார்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.