வாட்ஸ் அப் செயலியில் டார்க் மோடில் உங்கள் நண்பர்களுடன் சாட் பண்ணனுமா?

டார்க் மோட், user interface’ ஐ பிரகாசமான தோற்றத்திலிருந்து கருப்பு மற்றும் சாம்பல் நிறத்திலான இருண்ட ஷெடுக்கு மாற்ற உதவியாக இருக்கும். இது கைபேசியை இரவு நேரத்தில் உற்றுப் பார்க்காமல் சுகமாக பயன்படுத்த உதவும். இது கைபேசியின் பாட்டரியை அதிகரிக்கவும் செய்கிறது

whatsapp tricks to spot and stop fake news
whatsapp tricks to spot and stop fake news

உங்கள் வாட்ஸ் அப்பில் டார்க் மோடு அப்டேட் செய்யப்பட்டு விட்டதா என இன்னும் தேடுகிறீர்களா? கடந்த 18 மாதங்களுக்கு முன்பே முகநூல் (Facebook) ஆல் நிர்வகிக்கப்படும் இந்த மெசஞ்சர் அப்பில் இருண்ட வடிவமைப்பை கொண்டு வர விரும்பினர். இந்த புதிய முறை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் கைபேசி பயனாளர்கள் தாங்கள் விரும்பிய நேரத்தில் தங்கள் வாட்ஸ் அப்பில் டார்க் மோடை மாற்றிக் கொள்ள அனுமதிக்கும். சிஸ்டம் வைட் (system wide) டார்க் மோட் Android 10 and iOS களில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடந்த வருடம் பல முன்னனி அப்-கள் இந்த புதிய தோற்றத்துக்கு ஆதரவளிக்கும் அப்டேட் களை கொண்டுவந்தன.

கட், காபி, பேஸ்ட் கண்டுபிடித்த கம்யூட்டர் விஞ்ஞானி காலமானார்

டார்க் மோட், user interface’ ஐ பிரகாசமான தோற்றத்திலிருந்து கருப்பு மற்றும் சாம்பல் நிறத்திலான இருண்ட ஷெடுக்கு மாற்ற உதவியாக இருக்கும். இது கைபேசியை இரவு நேரத்தில் உற்றுப் பார்க்காமல் சுகமாக பயன்படுத்த உதவும். இது கைபேசியின் பாட்டரியை அதிகரிக்கவும் செய்கிறது.

தற்போது வரை அண்ட்ராய்டு பயனாளர்களுக்கு ஒரே வழி டிஸ்ப்ளேவை டார்க் மோடுக்கு மாற்றுவது தான். ஆனால் பல இலவச ஆப்கள் பல முன்னனி ஆப்களை இருண்ட வடிவில் பார்க்க உதவுகிறது. இவற்றில் XDA Labs இல் இருந்து டவுன்லோட் செய்யக்கூடிய Dubbed DarkQ ஆப்பும் ஒன்று. இது பல மூன்றாம் தரப்பு ஆப்களோடு டார்க் மோட் இல்லாமல் வேலை செய்யும். DarkQ ஆப்பை எவ்வாறு இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்ற தகவல்களை பயனர்கள் இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம். பயனர்கள் வாட்ஸ் அப்-பில் இரவில் சாட் செய்ய விரும்பினால் இது நல்ல வழிமுறை.

வாட்ஸ் ஆப்-ல் தெளிவில்லாத புகைப்படங்களை எவ்வாறு தவிர்ப்பது?

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How to chat in whatsapp web with dark mode

Next Story
6 கேமராக்களுடன் வெளியாகிறது ரியல்மீ X50 ப்ரோ ஸ்மார்ட்போன்!Realme X50 Pro 5G sports six cameras
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com