ஆதார் மத்திய அரசால் வழங்கப்படும் மிக முக்கிய அடையாள அட்டையாகும். 12 இலக்க தனித்துவ எண் இருக்கும். அதோடு பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, முகவரி உ ள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஷாப்பிங் முதல் பாஸ்போர்ட் வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஆதார் வைத்து பல மோசடிகள் நடைபெறுகிறது. குறிப்பாக சைபர் கிரைம் மோசடிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில், உங்கள் ஆதாரை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள முடியும், அது பற்றி பார்ப்போம்.
- myAadhaar என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கம் செல்லவும்.
2. அங்கு உங்கள் ஆதார் எண், கேப்ட்சா கோட் கொடுத்து ஓ.டி.பி உள்ளிட்டு லாக்கின் செய்யவும்.
3. அடுத்து “Authentication History” என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து எந்த தேதியில் இருந்து பார்க்க வேண்டும் என்று கொடுக்கவும்.
4. இப்போது விவரங்கள் வரும் அதில் சந்தேகப்படும்படியாக பரிவர்த்தனைகள் இருந்தால் UIDAI தளத்தில் புகார் அளிக்கவும்.
5. அல்லது UIDAI-ன் கட்டணமில்லா எண் 1947 அழைத்து புகார் தெரிவிக்கவும்.
6. அல்லது help@uidai.gov.in என்ற இ-மெயில் மூலமும் புகார் அளிக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil