scorecardresearch

டூர் போறீங்களா? அப்ப முதல்ல கூகுள் மேப்-ல இதை செக் பண்ணுங்க!

இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் உங்கள் பகுதியின் காற்றின் தரம் குறித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது.

டூர் போறீங்களா? அப்ப முதல்ல கூகுள் மேப்-ல இதை செக் பண்ணுங்க!
Google maps

இந்தியா உள்பட உலக நாடுகளில் காற்று மாசுபாடு மிக முக்கிய பிரச்சனையாக மாறிவருகிறது. குறிப்பாக டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையில் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். சுவாசப் பிரச்சனை போன்ற தீவிர உடல் பாதிப்பு ஏற்படுகிறது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, பொருட்கள் எரிப்பு, தொழிற்சாலைகள் உள்பட பல்வேறு காரணங்களால் காற்று மாசு ஏற்படுகிறது.

அதனால் நாம் இருக்கும் பகுதியிலும் நம்மை சுற்றியுள்ள பகுதியிலும் காற்றின் தரம் குறித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது. இதை கூகுள் மேப்ஸ் செயலிலேயே எளிதாக அறிந்து கொள்ளலாம். உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் மேப்ஸ் செயலிலேயே தெரிந்து கொள்ளலாம். முன்பு கூகுள் மேப்-ல் வழி பார்ப்பதற்காக மட்டும் பயன்படுத்தி வந்தோம் இப்போது இதற்கும் பயன்படுத்துவோம்.

கூகுள் மேப் பயன்படுத்தி காற்றின் தரம் அறிவோம்

  1. முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் செயலியை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
  2. அடுத்து உங்கள் ஸ்மார்ட்போனில் லோகேஷன் ஆன் செய்து கொள்ளுங்கள்.
  3. லோகேஷன் ஆன் செய்தால் நீங்கள் இருக்கும் இடத்தை செயலியே கண்டறிந்து கொள்ளும். அல்லது வேறு இடத்திற்கு காற்றின் தரம் பற்றி பார்க்க வேண்டும் என்றால் search bar-இல் குறிப்பிட்டு தேடவும்.
  4. இப்போது வலப்புறத்தில் உள்ள Layers-ஐகானை கிளிக் செய்யவும்.
  5. அதில் Air Quality என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
  6. அவ்வளவு தான் இப்போது நீங்கள் குறிப்பிட்ட பகுதியின் காற்றின் தரம் குறித்து தகவல் கிடைக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: How to check air quality using google maps

Best of Express