நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கட்டணம் செலுத்துவதை தவிர்க்க மற்றும் நேரத்தை மிச்சப்படுத்த மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை பாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியது. பாஸ்டேக் முறையின் மூலம் சுங்கச்சாவடி கட்டணங்கள் ஆன்லைன் மூலம் செலுத்தப்பட வேண்டும். இது சுங்கச்சாவடியில் காத்திருக்கும் நேரம் மற்றும் போக்குவரத்து நெரிசலை பெரும்மளவு குறைத்துள்ளது. பாஸ்டேக் முறை நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கார், கனரக வாகனங்கள், பேருந்துகளின் முன்பக்கத்தில் பாஸ்ட்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். சுங்கச்சாவடியை கடக்கும் போது டிஜிட்டல் முறையில் பணம் பெறப்படுகிறது. பாஸ்டேக் இல்லை என்றால் 2 மடங்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
இந்நிலையில் ஆன்லைனில் FASTag பேலன்ஸ் செக் செய்வது, ரீசார்ஜ் செய்வது குறித்து இங்கு பார்ப்போ
ஆன்லைனில் FASTag பேலன்ஸ் செக் செய்வது
FASTag கணக்குகள் எப்போதும் உங்கள் அதிகாரப்பூர்வ வங்கி ஐடி மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.
அதனால் பேலன்ஸ் (இருப்பைச்) செக் செய்ய உங்கள் வங்கி இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
வங்கி இணையதளத்தை ஓபன் செய்து ஆப் பாஸ்வேர்டு கொடுத்து FASTag என்ற பக்கத்திற்கு செல்லவும்.
வியூ ஃபாஸ்டேக் பேலன்ஸ் ஆப்ஷனைக் கிளிக் செய்து பார்க்கலாம்.
ஆப் மூலம் பார்க்கலாம்
இதற்கு கூகுள் பிளே ஸ்டோர் சென்று "My FASTag App" என்ற செயலியை டவுன்லோடு செய்யவும்.
அடுத்து அதில் லாக்கின் செய்து, தேவையான தரவுகளை கொடுத்து FASTag account கிரியேட் செய்து அதில் பேலன்ஸ், ரீசார்ஜ் செய்யலாம்.
மிஸ்டு கால் மூலம் பேலன்ஸ் செக்
மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை 'Missed Call Alert Facility'என்ற அம்சத்தை வழங்குகிறது.
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து +91-8884333331 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும். இதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணிற்கு FASTtag பேலன்ஸ் நோட்டிவிக்கேஷன் அனுப்பபடும்.
FASTtag ரீசார்ஜ்
FASTtag ரீசார்ஜ் மிகவும் எளிய வழிகளில் செய்யலாம். உங்கள் வங்கி இணையதளம், கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற பண பரிவர்த்தனை செயலிகள் மூலம் எளிதாக செய்யலாம். ஏர்டெல், ஜியோ போன்ற ஆப்களில் FASTtag ரீசார்ஜிற்கு அவ்வப்போது ஆஃபர்கள் வழங்கப்படும். வண்டி எண் அல்லது வண்டி பதிவு எண் உள்ளிட்ட ரீசார்ஜ் செய்யலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil