ட்விட்டர் பொறியாளர் ஒருவர் கடந்த சனிக்கிழமை தன்னுடைய ஸ்மார்ட்போன் உபயோகத்தில் இல்லாதபோது, மொபைல் மைக்ரோஃபோனை வாட்ஸ்அப் நிறுவனம் பயன்படுத்தியதாக புகார் அளித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் ஏற்பட்ட கோளாறு (Bug)ஆக இருக்கலாம். அதானல் அவரது தனியுரிமை டாஷ்போர்டில் உள்ள தகவல்கள் தவறாக காண்பிக்கப்படுகிறது என வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில் ஸ்மார்ட்போன்கள் உபயோகத்தில் இல்லாத போது பின்னணியில் எதாவது செயலி மைக்ரோஃபோன், கேமரா பயன்படுத்துகிறதா என்பது குறித்து இப்படி செக் செய்து பாருங்க.
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு
- முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் செட்டிங்ஸ் பக்கத்திற்கு செல்லவும்.
2. Apps & Notifications என்ற ஆப்ஷனை Scroll down செய்து பார்க்கவும்.
3.இதில் எந்த செயலியை செக் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை தேர்ந்தெடுக்கவும்.
4.அடுத்து Permissions என்பதை கிளிக் செய்யவும்.
5. இப்போது அதில் மைக்ரோஃபோன் அல்லது கேமரா எனக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த செயலி இதற்கான அனுமதி பெற்றுள்ளது என்று பொருள்.
பின்னணியில் பயன்படுத்துகிறதா என்பதை பார்க்க
- இப்போது உங்கள் போனில் மேல் இருந்து கீழே ஸ்வைப் down செய்யவும். இப்போது notification panel ஓபன் ஆகும்.
2. அதில் மைக்ரோஃபோன் அல்லது கேமராவுக்கான குறியீடுகள் உள்ளதாக என்பதை பார்க்கவும்.
3. இந்த ஐகான் அதில் தென்பட்டால் அதை கிளிக் செய்து எந்த செயலி உங்கள் மைக்ரோஃபோன். கேமரா பயன்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“