தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நாளை (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் ஆகியவை எடுத்து சென்று வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடி மையத்திற்கு சென்று வாக்களிக்க வேண்டும்.
இருப்பினும் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை காணாமல் போய் இருந்தால், புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கு இன்னும் அட்டை கிடைக்கவில்லை என்றால் வேறு ஆவணங்கள் பயன்படுத்தி வாக்களிக்கலாம். இருப்பினும் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும். வாக்காளர் பட்டியல் நகல் உடன் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் ஆகிய ஆவணங்களை வாக்குச் சாவடி மையத்தில் காண்பித்து வாக்களிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா?
1. https://voters.eci.gov.in/ என்ற இணைய தளப்பக்கம் சென்று மேல் வலதுபுறத்தில் உள்ள “search in electoral roll" கிளிக் செய்யவும்.
2. உங்கள் மாநிலத்தை குறிப்பிட்டு பிறகு மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
3. உங்கள் முதல் பெயர் மற்றும் குடும்பப் பெயரைச் சேர்க்கவும்.
4. உங்கள் பிறந்த தேதி மற்றும் பாலினத்தைச் குறிப்பிடவும் .
5. அடுத்து உங்கள் மாவட்டம் மற்றும் மக்களவைத் தொகுதியைத் தேர்ந்தெடுக்கவும். கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்
6. இப்போது Search கொடுக்கவும்.
7. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தால் அது இப்போது காண்பிக்கப்படும். இதை நகல் எடுத்து வேறு ஆவணங்கள் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“