ஆண்டுதோறும் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும், ஆண்டு வருமானம் 2.5லட்சத்திற்கு மேல் இருந்தால் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும். அதில் வரி விலக்கு காண்பித்து பணத்தை ரிட்டன் பெறவும் முடியும். வீட்டு கடன் உள்பட சிலவற்றிக்கு வரி விலக்கு பெற முடியும். அப்படி வரி விலக்கு செய்து உங்கள் பணத்தில் கணசமான தொகை ரீஃபண்ட் பெறலாம். குறிப்பாக பணியிடங்களில் TDS பிடித்தம் செய்தால் அந்தப் பணத்தை வருமான வரித் தாக்கல் செய்து ரீஃபண்ட் பெற முடியும்.
அப்படி ரீஃபண்ட் கொடுத்த பணம் வந்துவிட்டதா? இல்லையா? எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய ஐ.டி.ஆர் ரீஃபண்ட் ஸ்டேட்ஸ் செக் செய்ய வேண்டும். அதற்கு, ஐ.டி.ஆர் ரீஃபண்ட் ஸ்டேட்ஸ் செக் செய்ய,
1. முதலில் வருமான வரித்துறையின் e-filing portal செல்லவும்.
2. அடுத்து உங்கள் பான் எண், பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழையவும்.
3. இப்போது, e-File > Income Tax Returns > View Filed Returns என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது நீங்கள் வருமான வரித் தாக்கல் செய்தது, ரீஃபண்ட் ஸ்டேட்ஸ் தொடர்பான அனைத்து விவரங்களும் காண்பிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“