scorecardresearch

உங்க ஃபேஸ்புக் தகவல் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வது எப்படி?

பேஸ்புக் செயலியை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து இங்கு பார்ப்போம்.

உங்க ஃபேஸ்புக் தகவல் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வது எப்படி?

பேஸ்புக் பிரபலமான சமூகவலைதளம் ஆகும். இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் பேஸ்புக் பயன்படுத்தப்படுகிறது. கடை கோடியில் உள்ளவர்களிடம் கூட பேஸ்புக்கில் தொடர்பு கொண்டு பேசலாம். தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டு வருகிறது.

மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பேஸ்புக் பயனர்களின் தகவல் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இது உலக முழுவதும் உள்ள பயனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. நிறுவனமும் இதுகுறித்து விளக்கம் அளித்தது. இந்நிலையில், உங்களுடைய பேஸ்புக் தகவல் திருடப்பட்டுள்ளதா? என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள். மேலும், இதுபோன்ற சம்பவங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து பார்க்கலாம்.

தகவல் கசிவுக்கு காரணம்

தகவல் கசிவுக்கு முக்கிய காரணமாக முறையான அப்டேட் செய்யப்படாதது தான் என்று கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டுக்குப் பிறகு வெளிவந்த அப்டேட்டுகளை செய்யாமல் போனது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் பல மோசடிகளை செய்ததாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் உங்கள் தனிப்பட்ட தகவல்களும் திருடப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் HaveIBeenPwned.com என்ற இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் கேட்கப்படும் உங்கள் விவரங்கள் இமேயில் ஐடி அல்லது மொபைல் எண் பதிவிட வேண்டும்.

பேஸ்புக் மொபைல் எண்ணுடன் லிங்க் செய்யப்பட்டிருந்தால் அதைக் கொடுக்க வேண்டும். இணையதளம் ‘Oh no —pwned!’ என்ற முடிவைக் கொடுத்தால், உங்கள் தனிப்பட்ட தரவு இணையத்தில் உள்ளது என்று அர்த்தம்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

பதற்றம் வேண்டாம். உங்கள் பேஸ்புக் பாஸ்வேர்ட்டை மாற்றுங்கள். இமேயில் ஐடி பாஸ்வேர்ட்டையும் மாற்றிக் கொள்ளலாம். மேலும், நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சமூகவலைதள ஆப்-களிலும் Two Step Verification process- யை ஆக்டிவேட் செய்து கொள்ளவும்.

சந்தேகத்திற்குரிய லிங்க்குள், மெசேஜ்கள் வந்தால் கவனமாக இருக்க வேண்டும் Gmail, SMS, WhatsApp-ல் வரும் சந்தேகத்திற்குரிய லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம். பேஸ்புக் மற்ற சமூகவலைதளத்திற்கு ஒரு இமெயில் ஐடி அல்லது மொபைல் எண்ணும் வங்கி பரிவர்த்தனைகளுக்கு வேறு எண்ணும் பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: How to check my facebook account hacked or not