How to check name in voter list and download voter id slip Tamil News : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 நெருக்கவுள்ளது. மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தேர்தல்கள் நடைபெற்றன.
ஒருவர் வாக்காளராகப் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், அல்லது ஒரு நபர் ஒரு புதிய இடத்திற்கு தங்களின் பதிவை மாற்றியிருந்தாலும், உள்ளூர் வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயரை சரிபார்ப்பது கடினம். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை இனி பார்க்கலாம்.
தேசிய வாக்காளர்களின் சேவை போர்ட்டலைப் பார்வையிடவும் https://www.nvsp.in அல்லது தேசிய வாக்காளர் சேவைகள் போர்ட்டலின் தேர்தல் தேடல் பக்கத்திற்கு (என்விஎஸ்பி) உள்நுழைக. https://electoralsearch.in/
உங்களிடம் இருந்தால் உங்கள் அடையாள எண்ணைத் தயாராக வைத்திருங்கள். உங்களிடம் EPIC எண் இருந்தால், EPIC தேடலைக் க்ளிக் செய்யுங்கள்.
நீங்கள் EPIC எண்ணைச் சேர்த்த பிறகு, மாநிலத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
இது முடிந்ததும், விவரங்களை உள்ளிட்டுத் தேடல் பட்டனை க்ளிக் செய்யுங்கள். உங்கள் விவரங்கள், இந்தப் பக்கத்தின் கீழே தோன்றும்.
உங்களுக்கு EPIC எண் நினைவில் இல்லை என்றால், விவரங்கள் மூலம் தேடலைக் க்ளிக் செய்யுங்கள்.
திரையில் தோன்றும் படிவத்தை நிரப்பவும். பெயர், வயது, பாலினம், மாவட்டம், சட்டமன்றத் தொகுதி போன்ற விவரங்களை உள்ளிடவும்.
விருப்பத்தைத் தேர்வுசெய்து வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைத் தேடுங்கள்
உங்கள் பெயர் தோன்றும்போது விவரங்களைக் காண அதனை க்ளிக் செய்யுங்கள்
புகைப்பட வாக்காளர் சீட்டை ஆன்லைனில் பதிவிறக்குவது எப்படி:
நீங்கள் சாவடிக்குச் செல்வதற்கு முன், உங்கள் வாக்காளர் சீட்டு மற்றும் ஆன்லைன் புகைப்பட ஐடி ஆதாரத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதை எப்படிச் செய்வது என்பதற்கான வழிமுறைகள் இங்கே.
உங்கள் மாநிலத்தின் தேர்தல் ஆணையத்தின் வலைப்பக்கத்திற்குச் செல்லவும்
வாக்காளர்கள் கார்னர் செல்லுங்கள்
தேர்தல் பட்டியலில் பெயர் தேடலில் க்ளிக் செய்யவும்
விவரங்களை நிரப்பவும்
இப்போது உங்கள் பெயர் தோன்றும். பார்வை விவரங்களைக் க்ளிக் செய்தால் பின்னர் உங்கள் வாக்காளர் சீட்டுக்கு அனுப்பப்படுவீர்கள்.
இதனை இப்போது ப்ரின்ட் எடுத்துக்கொள்ளலாம்.
அடையாள நோக்கத்திற்காகத் தேவையான ஆவணங்கள்:
பாஸ்போர்ட்
ஓட்டுனர் உரிமம்
ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படங்களுடன் சேவை அடையாள அட்டைகள்
வங்கி / தபால் அலுவலகம் வழங்கிய புகைப்படங்களுடன் கூடிய பாஸ் புக்
பான் அட்டை
என்.பி.ஆர் கீழ் இந்திய பதிவாளர் ஜெனரல் வழங்கிய ஸ்மார்ட் கார்டு
MNREGA வேலை அட்டை
தொழிலாளர் அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
புகைப்படத்துடன் ஓய்வூதிய ஆவணம்
எம்.பி.க்கள் / எம்.எல்.ஏக்கள் / எம்.எல்.சி.க்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள் மற்றும்
ஆதார் அட்டை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil