PAN Aadhar Card Link Status Check Online: ஆதார் அட்டையுடன் பேன் அட்டையின் எண்ணை இணைக்காதவர்களுக்கு மார்ச் 30ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்திற்குள் ஆதாருடன் பேன் கார்டு இணைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த உச்சநீதிமன்றம், இப்போது ஆதாருடன் பேன் இணைப்பது அவசியம் என்று உத்தரவிட்டுள்ளது.
PAN - Aadhar Card Link : ஆதார் அட்டை - பேன் கார்டு இணைப்பு
முன்னதாக மத்திய நேரடி வரி வாரியம் (சி.டி.டி.டி) ஜூன் 30 வரை மதிப்பீட்டாளர்கள் தங்கள் PAN கார்டுகளை ஆதாருடன் இணைக்க அனுமதி அளித்திருந்தது. இப்போது அது இந்த வருடத்தின் நிதி ஆண்டு முடிவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139 ஏஏ (2) கீழ், 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியன்று பான் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும், ஆதார் பெற தகுதியுடையவர், எனவே தனது ஆதார் எண்ணை வரி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது முறையாகும்.
ஆதாருடன் இணைக்கப்படாத அனைத்து பேன் கார்டு எண்களும் செல்லாது என்று மார்ச் 31ம் தேதி வருமான வரித்துறை அறிவிக்கவுள்ளது. எனவே www.incometaxindiaefiling.gov.in வலைத்தளத்தின் ஊடாக விரைவில் ஆத்ஹார் எண்களுடன் அவற்றை இணைப்பது நல்லது.
முன்னாள் சிபிடிடி தலைவர் சுஷில் சந்திரா கூறுகையில், “23 கோடி பேன் கார்டு வைத்துள்ளவர்களில் சுமார் பாதிக்கும் மேற்பட்ட கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டன” என்று தெரிவித்தார்.
வீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையில் விவரங்களை மாற்றலாம்...
ஒருவேளை நீங்கள் உங்கள் பேன் அட்டை எண்ணை ஆதாருடன் இணைத்திருக்கிறீர்களா என்பதில் சந்தேகம் வந்தால்... கீழ் காணும் முறையில் அதனை நீங்கள் சரிபார்த்துக்கொள்ளலாம்.
- incometaxindiaefiling.gov.in இணையத்தளத்திற்கு சென்று, “ஆதார் இணைக்கவும்” என்பதை கிளிக் செய்யவும்.
- அந்த பக்கத்தின் மேலே, “இங்கே கிளிக் செய்யவும்” என்பறு ஒரு ஆப்ஷல் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் தோன்றும். அதை கிளிக் செய்யவும்.
- ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் உங்கள் ஆதார் எண் மற்றும் பேன் எண் விவரங்களை பதிவிடுங்கள். உங்கள் பேன் கார்டு எண் இணைக்கப்பட்டிருக்கிறதா என்று அப்போதே தெரிந்துவிடும்.