பல்வேறு துறை தகவல்கள், நிறுவனத்தின் தகவல்கள் அறிவது என எல்லாவற்றிற்கும் வெப்சைட் உள்ளது. அந்த வெப்சைட் சரியானது தானா? சில சமயங்களில் பணம் அனுப்பும் போது சரியான நிறுவனத்திற்குத் தான் அனுப்புகிறோமா எனப் பல்வேறு சந்தேகம் எழலாம். அந்த வகையில் ஒரு வலைத்தளத்தின் நம்பகத் தன்மையை அறிவது குறித்து இங்கு பார்ப்போம்.
1. டொமைன் பெயரைச் சரிபார்க்கவும்
ஒரு டொமைன் பெயர் என்பது இணையதளத்தை அணுக பயன்படும் முகவரி. டொமைன் பெயர்கள் பொதுவாக, .com, .org, .gov மற்றும் .edu போன்ற சில பொதுவான மற்றும் புகழ்பெற்ற நீட்டிப்புகளுடன் முடிவடையும். இவற்றைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் பொதுவாக உண்மையானவை. நன்கு அறியப்பட்ட டொமைன்களின் எழுத்துப்பிழை செய்து போலியாக இருக்கக் கூடும். அதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
2. HTTPS செக் செய்யவும்
இணையதளம் URL HTTPS (ஹைபர்டெக்ஸ்ட் டிரான்ஸ்ஃபர் புரோட்டோகால் செக்யூர்) பயன்படுத்துகிறதா என்று பார்க்கவும். ‘எஸ்’ என்பது பாதுகாப்பான இணைப்பு-ஐ (secure connection) குறிக்கிறது.
3. Check for redirections
அந்த இணையதள லிங்க்-ஐ கிளிக் செய்யும் போது ரீ-டைரெக்ட் செய்யப்படுகிறதா என்பதைப் பார்க்கவும்.
4. Check ‘About Us’ and ‘Contact’ page
போலி இணையதளங்கள் பொதுவாக தங்கள் பற்றிய தொடர்புத் தகவலை மறைக்கும், அதேசமயம் முறையான இணையதளங்கள் அவ்வாறு செய்யாது. நம்பகமான இணையதளத்தில் முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை இருக்கும்.
5. Use online tools to check the credibility of websites
ஆன்லைன் டூலஸ் பயன்படுத்தி நம்பகத் தன்மை சரிபார்க்கவும்.
WoT (Web of Trust) extension
WOT: Website Security & Safety Checker என்பது Chrome நீட்டிப்பு மற்றும் உங்கள் உலாவியில் எளிதாக சேர்க்கப்படலாம். இந்த நீட்டிப்பு கட்டண மற்றும் இலவச பதிப்பு இரண்டையும் கொண்டுள்ளது. அதே சமயம் இணையதளத்தின் நம்பகத் தன்மையை சரிபார்க்க இலவச பதிப்பு போதுமானது.
உலாவியில் சேர்த்த பிறகு, நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், வலைத்தளத்தின் இணைப்பைக் கிளிக் செய்து, பின்னர் chrome நீட்டிப்பைக் கிளிக் செய்யவும். இது நம்பகமான இணையதளமா இல்லையா என்பதை நீட்டிப்பு உங்களுக்குத் தெரிவிக்கும், மேலும் இணையதளத்தைப் பற்றிய மதிப்புரைகளைப் படிக்கக்கூடிய விருப்பத்தையும் உங்களுக்கு வழங்கும்.
உங்கள் உலாவியில் இந்த நீட்டிப்பைச் சேர்த்து, கூகிள் தேடலைச் செய்தால், இணையதளம் பாதுகாப்பானது என்று பரிந்துரைக்க, 'முடிவுகள்' பக்கம், இணையதளத்தின் பெயருக்கு அருகில் பச்சை நிற டிக் காட்டப்படும்.
Stopaganda Plus chrome extension
வெப்செட்-ன் நம்பகத் தன்மையை சரிபார்க்க பயன்படுத்தும் மற்றொரு ஆன்லைன் டூல் இதுவாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.