இந்தியாவின் புதிய முகவரி புரட்சி: பின்கோடுக்கு பதிலாக 10 எழுத்து டிஜிபின்!

இந்தியாவில் உள்ள இடங்களைத் துல்லியமாக அடையாளம் காணும் நோக்கத்துடன், இந்திய அரசு "டிஜிபின்" (DIGIPIN) என்ற புதிய டிஜிட்டல் முகவரி அமைப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விபரங்கள்தான் என்ன? என்று இந்தப் பதிவில் காணலாம்.

இந்தியாவில் உள்ள இடங்களைத் துல்லியமாக அடையாளம் காணும் நோக்கத்துடன், இந்திய அரசு "டிஜிபின்" (DIGIPIN) என்ற புதிய டிஜிட்டல் முகவரி அமைப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விபரங்கள்தான் என்ன? என்று இந்தப் பதிவில் காணலாம்.

author-image
WebDesk
New Update
DIGIPIN

இந்தியாவின் புதிய முகவரி புரட்சி: 10 எழுத்து டிஜிபின் என்றால் என்ன?

இந்தியாவில் உள்ள இடங்களைத் துல்லியமாக அடையாளம் காணும் நோக்கத்துடன், இந்திய அரசு "டிஜிபின்" (DIGIPIN) என்ற புதிய டிஜிட்டல் முகவரி அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, நாட்டில் இதுவரை இல்லாத புவியியல் துல்லியத்தை வழங்குவதன் மூலம் பல்வேறு சேவைகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு last-mile delivery-ஐ நெறிப்படுத்த இந்த டிஜிபின் பெரிதும் உதவும். மேலும், போலீஸ், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை போன்ற அவசரகால சேவைகள் விரைந்து செயல்படவும், நேரத்தை மேம்படுத்தவும் இது வழிவகுக்கும்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "டிஜிபின், குடிமக்களுக்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே பாதுகாப்பான மற்றும் திறமையான தகவல் தொடர்புக்கு வழிவகுக்கும். இது open-source இயங்குதன்மை கொண்ட geo-coded மற்றும் grid-based கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் முகவரி அமைப்பாகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய அமைப்பு குறித்து இந்திய அஞ்சல் துறை தனது 'எக்ஸ்' பக்கத்தில், "கட்டமைக்கப்படாத அல்லது மாறிவரும் முகவரிகளைக் கொண்ட பகுதிகளில், துல்லியமான இருப்பிட அடிப்படையிலான அடையாளத்தை வழங்குவதன் மூலம் முகவரி நிர்வாகத்தை டிஜி-பின் எளிதாக்குகிறது. குறிப்பாக, கிராமப்புறங்கள், காடுகள் மற்றும் கடல்கள் போன்ற தெளிவான முகவரிகள் இல்லாத இடத்தில் இது பேருதவியாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளது.

Advertisment
Advertisements

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

பின்கோடு (PIN CODE):

அஞ்சல் சேவைகளுக்காக வழங்கப்பட்டிருக்கும் பின்கோடு 6 இலக்க எண்களைக் கொண்டது. முதல் இலக்கம் மண்டலத்தையும், 2-வது உள் மண்டலத்தையும், 3-வது மண்டலத்திற்குள் வரிசைப்படுத்தும் மாவட்டத்தையும், 4-வது வரிசைப்படுத்தும் மாவட்டத்திலுள்ள அலுவலகம் அமைந்துள்ள வழியையும் குறிக்கின்றன. கடைசி 2 இலக்கங்கள் குறிப்பிட்ட தபால் அலுவலகத்தை அடையாளம் காட்டுகின்றன.

டிஜி பின் (DG PIN - Digital Postal Index Number)

டிஜி பின், எழுத்துக்களையும் எண்களையும் கொண்ட 10 இலக்க குறியீடாகும். டிஜி பின், குறிப்பிட்ட முகவரிக்கு தனித்துவ அடையாளமாக விளங்கும். ஜியோ லொகேஷன் முறையில் செயல்படவிருக்கும் டிஜி பின் அஞ்சல் சேவைகளுக்கும் பயன்படலாம்.

பின் கோடு மற்றும் டிஜிபின் வேறுபாடுகள்:

பின்கோடு ஆறு இலக்கமும், டி ஜி பின் பத்து இலக்கமும் கொண்டது. பின்கோடு, தபால் அலுவலகம் அமைந்துள்ள இடத்தைக் குறிக்கும். டி ஜி பின், முகவரிக்கு தனித்துவ அடையாளத்தைக் கொடுக்கும். ஒரு முழுப் பகுதியையும் உள்ளடக்கிய சாதாரண PIN குறியீடுகளைப் போலன்றி, DIGIPIN ஒரு சிறிய 4-மீட்டர் 4-மீட்டர் சதுரத்தைக் குறிக்கிறது.

உருவாக்கமும் தொழில்நுட்பமும்:

டிஜிபின் தொழில்நுட்பத்தின் பின்னணியில் இந்திய அஞ்சல் துறை, ஹைதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Hyderabad) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) கீழ் செயல்படும் தேசிய தொலையுணர்வு மையம் (NRSC) இணைந்து பணியாற்றியுள்ளன.

பாதுகாப்பு மற்றும் தனியுரிமை

இந்த அமைப்பு ஒரு திறந்த மூல (Open-Source), இயங்குதன்மை கொண்டது (Interoperable) மற்றும் தனியுரிமையை மையமாகக் கொண்டது (Privacy-focused) என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு டிஜிபின்னும் அந்த இடத்தின் புவியியல் ஆயத்தொலைவுகளைக் (Geographic Coordinates) கொண்டே குறியாக்கம் செய்யப்படுகிறது. எனவே, இது எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் சேமிக்காது என்பது இதன் முக்கிய அம்சமாகும்.

டிஜிபின்னின் துல்லியமானது, இருப்பிடத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் உலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பின் (GNSS) சிக்னலைப் பெறும் சாதனத்தின் திறனைப் பொறுத்து அமையலாம் என்று இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. மிக முக்கியமாக, டிஜிபின் தற்போதுள்ள ஆறு இலக்க அஞ்சல் குறியீட்டு (PIN) முறைக்கு மாற்றாக வராது. மாறாக, தற்போதுள்ள அஞ்சல் முகவரிகளின் மீது ஒரு கூடுதல் துல்லியத்தை வழங்கும் ஒரு மேலதிக அடுக்காகவே (Extra Layer) செயல்படும்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: