கூகுள் மேப்ஸில் சர்ச், லொக்கேஷன், டைம் லைன் விவரங்களை டெலிட் செய்வது வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் அதை எவ்வாறு செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
கூகுள் மேப்ஸ் சர்ச் history டெலிட் செய்வது
கூகுள் மேப்ஸில் நீங்கள் தேடிய அல்லது போய் வந்த இடங்கள் குறித்த விவரங்களை டெலிட் செய்யலாம். நீங்கள் remove மட்டும் செய்தால் அது சென்று விடாது. அதை டெலிட் செய்ய வேண்டும்.
1. முதலில் உங்கள் போனில் கூகுள் மேப்ஸ் ஓபன் செய்து வலப்புறத்தில் உள்ள Profile picture ஐகானை கிளிக் செய்யவும்.
2. செட்டிங்ஸ் பக்கம் சென்று scroll down செய்து ‘Maps history’ கொடுக்கவும்.
3. வலப்புறத்தில் வரும் ஆப்ஷனில் ப்ளூ நிறத்தில் உள்ள டெலிட் பட்டனை கிளிக் செய்யவும். கூகுள் இப்போது 4 ஆப்ஷன்களை வழங்கும். Time period ஆப்ஷன்களை வழங்கும். அதை தேர்ந்தெடுத்து உங்களுடைய previous searches டெலிட் செய்து கொள்ளலாம்.
கூகுள் மேப்ஸில் லொக்கேஷன், டைம் லைன் டெலிட் செய்வது
நீங்கள் உங்கள் போனில் லொக்கேஷன் ஆன் செய்து வைத்துள்ளீர்கள் என்றால் கூகுள் மேப்ஸ் உங்களை ட்ராக் செய்யலாம். நீங்கள் எங்கு, எப்போது சென்றீர்கள் என்பதை கூகுள் மேப்ஸ் பதிவு செய்து வைக்கலாம். எனவே நீங்கள் இந்த விவரங்களை டெலிட் செய்ய இதை செய்யலாம்.
1. முதலில் உங்கள் போனில் கூகுள் மேப்ஸ் ஓபன் செய்து வலப்புறத்தில் உள்ள Profile picture ஐகானை கிளிக் செய்யவும்.
2. இப்போது ‘Your timeline’ என்பதை கிளிக் செய்தால் புதிய பக்கத்தில் உங்கள் location history விவரங்கள் இடம்பெறும்.
3. நீங்கள் சென்று வந்த ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் டெலிட் செய்ய வேண்டும் என்றால் அந்த தகவலின் பக்கத்தில் வலப்புறத்தில் உள்ள 3 புள்ளி மெனுவை கிளிக் செய்து டெலிட் செய்யலாம். நீங்கள் ஒட்டுமொத்தமாக டெலிட் செய்ய வேண்டும் என்றால் மேல வலப்புறத்தில் உள்ள டெலிட் பட்டனை கிளிக் செய்தால் அந்த நாளுக்கான ஒட்டுமொத்த location history டெலிட் செய்யப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“