How to Create Facebook Reels Tamil News : இன்ஸ்டாகிராம் ரீல்களை அதன் பிளாட்ஃபார்மில் உருவாக்கி பகிர்ந்து கொள்ளும் திறனை வெளியிடுவதாக ஃபேஸ்புக் இன்று அறிவித்தது. குறுகிய வீடியோக்கள் இந்தியாவில் பரவலாக பிரபலமாக உள்ளன. அதுமட்டுமின்றி, பைட்டான்ஸின் டிக்டாக் தடைக்குப் பின்னர் பல பயன்பாடுகள் பயன்படுத்த மக்கள் முயற்சி செய்தனர். இந்நிலையில் ரீல்ஸ் அறிமுகத்துடன் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமின் வழியை இனி பின்பற்றும்.
ஃபேஸ்புக்கில் ரீல்ஸ் எவ்வாறு உருவாக்குவது என்பது இங்கே
# உங்கள் பேஸ்புக் செய்தி ஊட்டத்தின் மேல், ரீல்ஸ் அல்லது குறுகிய வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
# பயன்பாட்டில் உள்ள கேமராவைப் பயன்படுத்தி வீடியோக்களை பதிவு செய்யலாம் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனின் கேமரா ரோலிலிருந்து வீடியோக்களையும் பதிவேற்றலாம். ஹேண்ட்ஸ் ஃப்ரீ வீடியோக்களை பதிவு செய்ய நீங்கள் டைமரைப் பயன்படுத்தலாம்.
# உங்கள் ரீலுக்கு ஏற்ற பல வீடியோக்களை நீங்கள் ஆய்வு செய்யலாம், ஒழுங்கமைக்கலாம் மற்றும் திருத்தலாம்.
# நீங்கள் பதிவு செய்யும் போது அசல் ஆடியோவைச் சேர்க்கலாம் அல்லது பின்னர் ஆடியோவைச் சேர்க்கலாம் அல்லது ஃபேஸ்புக்கின் இசை நூலகத்திலிருந்து ஒரு பாடலைத் தேடி தேர்வு செய்யலாம்.
# பேஸ்புக்கின் AR நூலகத்திலிருந்து கிடைக்கக்கூடிய ஆக்மென்ட் ரியாலிட்டி (AR) எஃபக்ட்டுகளை நீங்கள் தேர்வு செய்யலாம். இதில் படைப்பாளர்களிடமிருந்து வரும் எஃப்பக்ட்களும் அடங்கும். ஒரு வீடியோவில் பல கிளிப்களில் வெவ்வேறு AR எஃபக்ட்டுகளை சேர்க்கும் திறனையும் ஃபேஸ்புக் பயனர்களுக்கு வழங்குகிறது.
# பயனர்கள் வீடியோவின் வேகத்தை மெதுவாக இயக்கவோ அல்லது வேகமாக முன்னோக்கி நகர்த்தவோ வழிவகுக்கிறது. மேலும், அவர்கள் வீடியோ அல்லது ஆடியோவின் வேகத்தை தனித்தனியாக மாற்றலாம்.
# ரீல் செய்யப்பட்டவுடன், பயனர்கள் அதை தங்கள் செய்தி ஊட்டத்தில் பகிரலாம். இந்த ரீலுக்கு பார்வையாளர்களை தேர்வு செய்வதற்கான விருப்பத்தை ஃபேஸ்புக் வழங்குகிறது. அவர்கள் அதை தங்கள் நண்பர் பட்டியலில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது அதை பொதுவில் போஸ்ட் செய்யலாம் அல்லது ரீல் காணக்கூடிய சொந்த பார்வையாளர்களை அமைக்கலாம்.
இந்தியாவில் இன்ஸ்டாகிராம் உள்ளடக்க படைப்பாளர்களுக்காக ஒரு அம்சத்தை சோதித்து வருவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. இது அவர்களின் ஃபேஸ்புக் கணக்குகளில் தங்கள் ரீல்களைப் பகிர அனுமதிக்கிறது.
இந்தியாவில் இன்ஸ்டாகிராமில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உள்ளடக்க படைப்பாளர்களுக்கும் ஃபேஸ்புக்கில் தங்கள் ரீல்களைப் பரிந்துரைக்கும் திறன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரபலமான உள்ளடக்க க்ரியேட்டர்கள் மற்றும் பூஜா திங்ரா, ஆஷிஷ் சாஞ்ச்லானி, மாஸ்டர் செஃப் பங்கஜ் படூரியா, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் பல விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"