/indian-express-tamil/media/media_files/x3fsusRIBp8yobTVAXlH.jpg)
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் டிஜிட்டல் டிரைவ், பொதுவாக GPay எனப்படும் Google Pay மிகவும் பிரபலமாகியுள்ளது. கூகுள் பேயில் பணம் செலுத்த பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. அதுகுறித்து இங்கு பார்ப்போம்.
கூகுள் பே கணக்கு உருவாக்குவது மற்றும் வங்கிக் கணக்கு சேர்ப்பது எப்படி?
கூகுள் பேயில் புதிய கணக்கு உருவாக்க மொபைல் எண், அந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு மற்றும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தேவை.
- கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் பே டவுன்லோடு செய்து ஓபன் செய்யவும்.
2. உங்கள் மொழியை தேர்ந்தெடுத்து, மொபைல் எண் பதிவிடவும்.
3. அடுத்து ‘Continue’ கொடுத்து எந்த கூகுள் கணக்கில் கூகுள் பே அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
4. ஓ.டி.பி என்டர் செய்தால் கூகுள் பே ஹோம் பக்கம் ஓபன் ஆகும்.
5. ‘Add bank account’ பட்டன் கொடுத்து உங்கள் வங்கியை செலக்ட் செய்யவும். அடுத்து ‘Continue’ கொடுக்கவும்.
6. இப்போது கூகுள் பிளே தானாகவே உங்கள் வங்கி கணக்கு, அது இணைக்கப்பட்ட போன் நம்பர் கண்டறிந்து, உங்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும்.
7. இது Verifiy ஆன பின் ‘Enter UPI PIN’ கொடுத்து புதிய பின் செட் செய்யவும். அவ்வளவு தான் இப்போது நீங்கள் பரிவர்த்தனை செய்ய தொடங்கலாம்.
கிரெடிட், டெபிட் கார்டு Add செய்வது
1. கூகுள் பேயில் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு Add செய்ய ஆப் ஓபன் செய்து வலப்புறத்தில் உள்ள profile picture கிளிக் செய்யவும்.
2. கீழே Scroll செய்து ‘Pay with credit or debit cards’ ஆப்ஷன் கொடுக்கவும்.
3. அடுத்து ‘Add card’ பட்டன் கொடுக்கவும். இதை கொடுத்து ‘Enter details manually’ ஆப்ஷன் கொடுத்து கார்டு விவரங்களை பூர்த்தி செய்யவும்.
4. இதை கொடுத்த பின் ‘Save’ கொடுக்கவும், அவ்வளவு தான். இப்போது உங்கள் வங்கி இல்லாமல், நேரடியாக கிரெடிட், டெபிட் கார்டு மூலமாக பரிவர்த்தனை செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.