காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாட்ஸ்அப்பில் காதலர் தின ஸ்டிக்கரை உருவாக்கி அனுப்புங்கள். உங்கள் அன்பு மற்றும் பாசத்தை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். அவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும்.
வாட்ஸ்அப் இதற்காக லவ் தீம் ஸ்டிக்கர்களை வழங்குகிறது. வாட்ஸ்அப்பின் லைப்ரரியில் அதிக க்யூரேட்டட் ஸ்டிக்கர் பேக்குகள் உள்ளன, மேலும் இந்த ஸ்டிக்கர் பேக்குகளில் லவ் தீம் ஸ்டிக்கர்களைப் பார்க்கலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் செயலிகளில் இந்த ஸ்டிக்கர் பேக்குகளை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
Lovely Sugar Cubs, Mama Love, Stickerly போன்ற லவ் தீம் ஸ்டிக்கர் பேக்குகளை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.
சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி?
உங்கள் சொந்த காதலர் தின ஸ்டிக்கரை எளிதாக இருக்கலாம். முதலில் எந்த போட்டோவை ஸ்டிக்கருக்கு பயன்படுத்த வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளவும். அதோடு மைக்ரோசாஃப்ட் இமேஜ் கிரியேட்டர் அல்லது கூகுள் ஜெமினி போன்ற தளங்களைப் பயன்படுத்தி தனிப்பயன் காதலர் தின புகைப்படத்தை உருவாக்கி அதை ஸ்டிக்கராக மாற்றலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“