வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப்பை உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனம் புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் வாட்ஸ்அப் சேனல் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
அதாவது இன்ஸ்டாகிராம், டிவிட்டரில் பிரபலங்களை பின்தொடர்வது போல் வாட்ஸ்அப்பிலும் பின்தொடரலாம். வாட்ஸ்அப் சேனல் வசதி மூலம் இதை செய்யலாம். இந்திய கிரிக்கெட் அணி, கத்ரீனா கைஃப், விஜய் தேவரகொண்டா, தில்ஜித் தோசன்ஜ், அக்ஷய் குமார், விஜய் போன்ற பிரபலங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைந்துள்ளனர்.
மெட்டா சி.இ.ஓ ஜுக்கர்பெர்க்கும் இணைந்துள்ளனர். மெட்டா, வாட்ஸ்அப் அப்டேட்கள் அதில் தெரிவிக்கப்படுகின்றன. இந்நிலையில் நீங்கள் பிரபலங்கள் போல் வாட்ஸ்அப் சேனல் உருவாக்கி அதில் அப்டேட்களை பதிவிடலாம். குறிப்பாக தொழில் செய்பவர்கள் தங்கள் தயாரிப்புகளை அதில் அப்டேட் செய்ய வசதியாக இருக்கும்.
வாட்ஸ்அப் சேனல் உருவாக்குவது எப்படி?
1. முதலில், உங்கள் போன் வாட்ஸ்அப்பை சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ளவும்.
2. அதன் பின் வாட்ஸ்அப் சென்று அப்டேட் பக்கம் செல்லவும்.
3. அங்கு சேனல் ஐகானைக் கிளிக் செய்து Start Channel கொடுக்கவும்.
4. அடுத்து அதில் வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
5. உங்களுக்கான சேனலை உருவாக்கி அதற்கு பெயரிடவும். அவ்வளவு தான். உங்களுக்கான ஐகானை பதிவிடவும்.
எனினும் இந்த அம்சம் தற்போது அனைவருக்கும் கிடைக்கவில்லை. கட்டணம் செலுத்தி பெற வேண்டி உள்ளது. வாட்ஸ்அப் பிசினஸ் செயலியிலும் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“