ஜிமெயில் கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. அனைத்து மக்களும் ஜிமெயில் பயன்படுத்துகின்றனர். பணி தொடர்பாக, சொந்த தேவைக்காக என பல்வேறு தேவைகளுக்காக ஜிமெயில் பயன்படுத்துகின்றனர். கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் ஜிமெயில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. போன், லேப்டாப், கணினியில் ஜிமெயில் sync செய்து பயன்படுத்தலாம்.
ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதில் இருந்து ஜிமெயில் பயன்பாடும் அதிகரித்து விட்டது. ஆன்லைன் ஷாப்பிங், பண பரிவர்த்தனை என எல்லாம் டிஜிட்டல் மையமாக விட்டது. இதில் எல்லாவற்றிக்கும் ஜிமெயில் தேவையை குறிப்பிட்டிருப்போம். அந்தவகையில் பிளிப்கார்ட், அமேசான் எனப் பல விளம்பர மெயில்கள் குவிந்துகிடக்கும். இதில் நமக்கு தேவையான மெயிலைத் தேடி கண்டுபிடிப்பது கூட கடினமாக இருக்கும். பல நேரங்களில் எரிச்சல் அடைய செய்யும்.
இந்நிலையில் தேவையற்ற விளம்பர மெசேஜ், நீங்கள் படித்த மெசேஜை மொத்தமாக கிளிக் செய்து டெலிட் செய்யலாம். அது பற்றி பார்ப்போம்.
Step 1: உங்கள் லேப்டாப், கணினியில் ஜிமெயில் ஓபன் செய்து கொள்ளுங்கள்.
Step 2: இன்பாக்ஸ் பக்கத்தில் இடதுபுறத்தில் சிறு பாக்ஸ் போன்று (Drop down list box) இருக்கும்.
Step 3: அங்கு இன்பாக்ஸில் உள்ள Primary, Promotions, Social பக்கங்களில் உள்ள தேவையற்ற மெசேஜ்களை, நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய மெசேஜ்களை செலக்ட் செய்ய வேண்டும்.
Step 4: மெசேஜ்கள் செலக்ட் செய்யப்பட்டவுடன், பக்கத்தில் இருக்கும் டெலிட் ஆப்ஷன் கொடுத்து மெசேஜ் டெலிட் செய்யலாம்.
மொத்தமாக மெசேஜ் டெலிட் செய்ய மற்றொரு வழி
Step 1: ஜிமெயில் சர்ச்( Search) பாக்ஸில் அனைத்து படித்த மின்னஞ்சல்களை காட்ட 'label:read'
அல்லது படிக்காத மின்னஞ்சல்கள் அனைத்தையும் காட்ட 'label:unread' என டைப் செய்து 'Enter' கொடுக்கவும்.
Step 2: அடுத்து, 'Select All box'ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
Step 3: இதில் நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய மெசேஜ்களை செலக்ட் செய்ய வேண்டும், செலக்ட் செய்த பின் டெலிட் ஐகானை கிளிக் செய்து டெலிட் செய்யுங்கள்.
குறிப்பிட்ட நபர், விளம்பர மெயிலை டெலிட் செய்வது
Step 1: கணினியில் ஜிமெயில் ஓபன் செய்ய வேண்டும்.
Step 2: அடுத்து சர்ச் ( Search) பாக்ஸில் குறிப்பிட்ட நபர், விளம்பர நிறுவன இமெயில் ஐடியை குறிப்பிட வேண்டும்.
Step 3: டெலிட் செய்ய வேண்டிய மெசேஜ்களை செலக்ட் செய்து, டெலிட் ஐகானை கிளிக் செய்யவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil