கூகுள் குரோம், எட்ஜ், ஃபயர்பாக்ஸ் போன்றவைகள் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் இன்டர்நெட் ப்ரௌசர்கள் ஆகும். இதை டெஸ்க்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களிலும் பயன்படுத்தலாம். எனினும்
விளம்பரதாரர்களும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் நீங்கள் பார்வையிடும் அனைத்து இணையதளங்களிலிருந்தும் நிறைய தரவுகளை எடுக்கலாம். இது உங்களுடைய போனின் ஸ்டோரேஜ் மற்றும் தரவுகளை எடுக்கும். அதனால் வேண்டும்மென்றால் இந்த தரவுகளை நீங்கள் டெலிட் செய்யலாம்.
கூகுள் குரோம் history டெலிட் செய்வது எப்படி?
1. உங்கள் ஃபோன் அல்லது டேப்லெட்டில் Chrome-ஐ திறந்து மேலே வலதுபுறத்தில் உள்ள 3 புள்ளி மெனுவை கிளிக் செய்யவும்.
2. அடுத்து History கிளிக் செய்து Clear browsing data பட்டன் கொடுக்கவும்.
3. இப்போது browsing history-ஐ நீக்க விரும்பும் கால அளவை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்.
4. குக்கீகள், தளத் தரவு, தற்காலிகச் சேமிப்பு படங்கள் மற்றும் கோப்புகள் மற்றும் சேமித்த கடவுச்சொற்கள் மற்றும் படிவத் தரவைத் தானாக நிரப்புதல் போன்ற பிற அமைப்புகளை நீக்க வேண்டுமா என்பதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
5. உங்களின் ப்ரௌசிங் வரலாறு மற்றும் பிற தரவை நீக்க விரும்பும் கால அளவைத் தேர்வு செய்து, திரையின் அடிப்பகுதியில் உள்ள ‘Clear data’ பட்டனை கொடுக்கவும்.
Delete browsing history on Microsoft Edge
1. உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் மைக்ரோசாஃப்ட் எட்ஜைத் திறந்து, கீழே உள்ள பட்டியில் உள்ள 3 புள்ளி பட்டனை கொடுக்கவும்.
2. 'வரலாறு' என்பதைத் தட்டவும், Chrome ஐப் போலவே நீங்கள் பார்வையிட்ட வலைத்தளங்களைப் பார்ப்பீர்கள்.
3. இப்போது, மேல் வலதுபுறத்தில் தோன்றும் Trash- ஐகானை அழுத்தவும், நீங்கள் புதிய திரைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
4. இங்கே, நீங்கள் நீக்க விரும்பும் தரவைத் தேர்வுசெய்து, கால அளவைத் தேர்வுசெய்து, 'Clear data' பட்டனை கொடுக்கவும்.
Delete browsing history on Mozilla Firefox
1. பயர்பாக்ஸைத் துவக்கி, கீழே உள்ள பட்டியில் உள்ள 3 vertical dots கிளிக் செய்யவும்.
2. Drop-down மெனுவில் ‘History’ எனக் கொடுக்கவும்.
3. இப்போது, மேல் வலதுபுறத்தில் உள்ள trash ஐகானைத் தட்டி, உங்கள் browsing history-ஐ நீக்க விரும்பும் நேர வரம்பைத் தேர்ந்தெடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“