இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான சமூகவலைதளமாக இன்ஸ்டாகிராம் மாறியுள்ளது. சமானியர்கள், பிரபலங்கள் எனப் பலர் இன்ஸ்டா பயனாளராக உள்ளனர். பல்வேறு துறை பிரபலங்கள் தங்களைப் பற்றிய அப்டேட்களை இன்ஸ்டாவில் பகிர்வதால் இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
உலகில் உள்ள யார் ஒருவரிடமும் இன்ஸ்டாவில் அறிமுகமாகி பேசலாம். இன்ஸ்டாவில் சில நல்ல விஷயங்கள் இருந்தாலும், தேவையில்லாமலும், தவறான பதிவுகளும் கூட வரலாம். ஆனால் அவற்றை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதில் தான் உள்ளது. சிலர் இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிடுவர். இதை தவிர்த்து சிறிது காலம் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் இதற்கு சில வழிகள் உள்ளன. இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ஒட்டுமொத்தமாக டெலிட் செய்வது அல்லது தற்காலிகமாக டி-ஆக்டிவேட் செய்வது குறித்து பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் டெலிட் செய்யும் போது, நீங்கள் பதிவிட்ட போட்டோ, வீடியோ, உங்களை பின்தொடர்பவர்கள் என அனைத்து அழிந்து விடும். அதேவேளையில், தற்காலிகமாக டி-ஆக்டிவேட் செய்தால், நீங்கள் பதிவிட்ட போட்டோ, வீடியோ என அனைத்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டது போல் இருக்கும், உங்கள் அக்கவுண்ட்டில் காண்பிக்கப்படாது. மீண்டும் இன்ஸ்டா கணக்கை ஆக்டிவேட் செய்தால், அது அனைத்தும் திரும்பவந்துவிடும்.
இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் டெலிட் செய்வது
- முதலில் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் லாக்கின் செய்ய வேண்டும்.
- அதில் account deletion பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் அக்கவுண்ட் டெலிட் செய்வதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் காரணத்தை தேர்வு செய்ய வேண்டும்.
4.பின்பு, பாஸ்வேர்ட் பதிவு செய்து, டெலிட் ஆப்ஷன் கொடுக்க வேண்டும்.
அக்கவுண்ட் தற்காலிகமாக டி-ஆக்டிவேட் செய்வது
- இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் லாக்கின் செய்ய வேண்டும்.
- அதன்பின், Profile போட்டோவிற்குள் சென்று 'Edit Profile' ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்.
- Scoll செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள 'Temporarily disable my account'கிளிக் செய்ய வேண்டும்.
- அதைக் கொடுத்தால், தற்காலிகமாக டி-ஆக்டிவேட் செய்வதற்கான காரணங்கள் கேட்டக்கப்படும். அதில் காரணத்தை தேர்வு செய்து, மீண்டும் பாஸ்வேர்ட் பதிவு செய்ய வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.