ஃபேஸ்புக் அப்டேட்... இனி தேடி தேடி டெலிட் செய்ய வெண்டிய அவசியம் இல்லை!

டைம்லைனில் சேர் செய்த போஸ்ட் அல்லது ஸ்டேட்டஸ், வீடியோக்கள், புகைப்படங்களை டெலிட் செய்ய வேண்டும்

ஃபேஸ்புக் யூசர்களை கவரும் வகையில்,  டெலிட் செய்யும் வசதியில் புதிய அப்டேட் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நீண்ட நாட்களாக பொதுமக்கள் விரும்பிய  இந்த வசதி தற்போது அப்டேட் ஆகியுள்ளது.

இன்றைய தொழில்நுட்ப உலகில், ஃபேஸ்புக் செயலி அனைவரின் விருப்பமான ஒன்று. ஃபேஸ்புக் பக்கம் தொடங்கிய நாளிலிருந்துப் இன்று வரை இளைஞர்களுக்கு அதன் மேலுள்ள ஈர்ப்பு இன்று வரை குறையவில்லை. இருந்த போதும் ஃபேஸ்புக் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை தற்போது பெருமளவில் குறைந்தது.

காரணம்,  டொனால்ட் அதிபர் தேர்தலில் அவரை வெற்றி பெற செய்வதற்கு, கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை நிறுவனத்த்திற்கு, ஃபேஸ்புக் நிறுவனம், அமெரிக்க யூசர்களின்   தகவல்களை முறைகேடாக அளித்துள்ளதாக சர்ர்சை எழுந்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 8 லட்சம்  இந்திய மக்களின் தகவல்களும் கசிந்துள்ளதாக தகவல் வெளியானது.

இதனை த்தொடர்ந்து மக்களிடையே ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது இருந்த அதிகப்படியான நம்பிக்கை உடைந்தது. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர், மார்க்  யூசர்களிடம் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டார். மேலும் இனிவரும் காலங்களில்   ஃபேஸ்புக் செயலில் அதிக பாதுகாப்புடனும் , அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அதன் முதல்படியாக,  யூசர்கள் நீண்ட காலம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தேவை அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

முன்பெல்லாம்,  ஃபேஸ்புக் செயலில் உங்கள் டைம்லைனில் சேர் செய்த போஸ்ட் அல்லது ஸ்டேட்டஸ், வீடியோக்கள், புகைப்படங்களை  டெலிட் செய்ய வேண்டும் என்றால், அதை ஒவ்வொன்றாக தேர்வு செய்து டெலிட் செய்ய வேண்டும். அல்லது டைம்லைனில் இருந்து மறைக்க வேண்டும்.

அதேபோல், பழைய ஃபேஸ்புக் கணக்கில், நீங்கள் இது வரை ஷேர் அல்லது போஸ்ட் செய்த தகவல்களை ஒவ்வொன்றாக தேர்வு செய்து அழிக்க கடினப்பட்டுக் கொண்டு பலர்,  ஃபேஸ்புக் கணக்கையே மொத்தமாக டெலிட் செய்து விட்டு செல்வார்கள்.

அதற்கு பதிலாக தற்போது ஃபேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சோசுய்டல் புக் போஸ்ட் மேனஜர் என்ற புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.   (Social Book Post Manager)

இந்த ஆப்ஷனில் சென்று,  டைம்லைனில் நீங்கள் எந்த ஆண்டில் இருந்து, எந்த ஆண்டுவரை, எந்த மாதத்தில் ஷேர் செய்த போஸ்டுகளை டெலிட் செய்ய வேண்டுமோ அதை அழித்து விடலாம்.

×Close
×Close