ட்விட்டர் வரலாற்றை நீக்க எளிமையான வழிமுறைகள்!

ட்விட்டர் பக்கத்தில் முந்தைய வரலாற்றை நீக்கும் வழிமுறைகள் வெளியாகியுள்ளன.

பிரபலங்கள் அதிகம் பயன்படும் ட்விட்டர் வலைப்பக்கத்தில், அதன் முந்தைய வரலாற்றை நீக்கும் வழிமுறைகளை அந்நிறுவனம் தெளிவாக விவரித்துள்ளது.

இன்றைய இளைஞர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிகளவில் பயன்படுத்துக்கின்றன. நன்மை, தீமை இரண்டும் கலந்திருக்கும் இந்த வலைப்பக்கங்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. குறிப்பாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பிற்கு அடுத்தப்படியாக ட்விட்டர் செயலி அதிகளவில் யூசர்களை கொண்டுள்ளது.

அதே போல், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் ட்விட்டரை அதிகளவில் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. சொல்லப்போனால் ஃபேஸ்புக்கை விட, ட்விட்டர் கணக்கை கையாளுவது மிகவும் எளிது. யூசர்களை வரவு அதிகரிக்க அதிகரிக்க ட்விட்டர் நிறுவனமும், புதிய புதிய அப்டேட்டுகளை செய்து வருகிறது. அந்த வகையில், ட்விட்டர் பக்கத்தில் முந்தைய வரலாற்றை நீக்கும் வழிமுறைகள் வெளியாகியுள்ளன.

மெசேஜ்களை நீக்கும் வழிமுறை:

> உங்கள் இணைய பிரவுஸரில் இருந்து twitwipe.com தளத்திற்கு செல்ல வேண்டும்.

> அதில் டிவிட்டர் கணக்கை இணைத்துக் கொள்ள வேண்டும்.

>அதில் உங்களின் ட்விட்டர் கணக்கு குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்

>பின்னர் அதில் தோன்றும் டெலிட் வசதியை கிளிக் செய்தால், உங்கள் கணக்கில் உள்ள முந்தைய எல்லா ட்விட்டுகளும் தானாகவே அழிந்து விடும்.

இதே போன்று  ஏற்கனவே நீங்கள் பதிவு செய்த ட்விட்டுகள், புகைப்படங்கள், உங்களுக்கு வந்த தனிப்பட்ட மெசேஜ்கள் மற்றும் எமோஜி போன்றவற்றை எளிமையாக அழித்துக் கொள்ளவும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

×Close
×Close