How to disable Notification in Whatsapp Tamil News : உங்கள் தொலைபேசியை குடும்ப உறுப்பினர்களுக்கு எப்போதாவது கொடுக்க நேர்ந்தால், அவர்கள் அறிவிப்பு திரையிலோ அல்லது லாக் ஸ்க்ரீனிலோ உங்களின் தனிப்பட்ட செய்தியைப் படிக்கக்கூடும் என்று கவலைப்படுகிறீர்களா? எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் அதை அனுபவித்திருந்தால், அதுபோன்ற சங்கத்திலிருந்து விடுபட வழி இருக்கிறது. வாட்ஸ்அப் நோட்டிஃபிகேஷன் அல்லது முன்னோட்ட செய்தி விருப்பத்தை முடக்குவதன் மூலம் இது நடக்காது என்பதை நீங்கள் உறுதிப்படுத்தலாம்.
முன்னோட்டம் (preview) விருப்பத்தை முடக்க iOS பயனர்களுக்கு வாட்ஸ்அப் பயன்பாட்டில் விருப்பம் இருக்கிறது. ஆனால் ஆண்ட்ராய்டு பயனர்கள், தொலைபேசியின் அமைப்புகள் பிரிவிலிருந்து அதை முடக்க வேண்டும்.
iOS பயனர்கள் முன்னோட்ட விருப்பத்தை முடக்கும்போது, அறிவிப்பில் “செய்தி” என்ற குறிப்போடு வாட்ஸ்அப் அனுப்புநரின் பெயரை காண்பிக்கும். ஆனால், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இது பொருந்தாது.
அண்ட்ராய்டு: லாக் ஸ்க்ரீனில் வாட்ஸ்அப் செய்தி முன்னோட்டத்தை எவ்வாறு முடக்கலாம்
ஸ்டெப் 1: தொலைபேசியின் அமைப்புகள் பிரிவுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: ‘பயன்பாடுகள் & அறிவிப்புகளை’ க்ளிக் செய்து வாட்ஸ்அப் பயன்பாட்டைத் தேடுங்கள்.
ஸ்டெப் 3: செய்தியிடல் பயன்பாட்டைக் கண்டறிந்ததும், அறிவிப்புகளுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 4: ‘அறிவிப்புகளைக் காண்பி’ என்பதை நிலைமாற்றவும். இந்த நிலை முடிந்ததும், தொலைபேசியின் லாக் ஸ்க்ரீன் அல்லது அறிவிப்புத் திரையில் எந்த வாட்ஸ்அப் செய்திகளையும் நீங்கள் காண முடியாது.
நீங்கள் வாட்ஸ்அப்பிற்கான அறிவிப்புகளை முடக்க விரும்பவில்லை மற்றும் அறிவிப்பு பேனலில் செய்திகளை மறைக்க விரும்பினால், நீங்கள் வாட்ஸ்அப்பின் ‘உயர் முன்னுரிமை’ அம்சத்தை முடக்கலாம். உங்களுக்குத் தெரியாவிட்டால், ‘புஷ் அறிவிப்புகளை’ சிறந்த முறையில் நிர்வகிக்கப் பயனர்களை இது அனுமதிக்கிறது.
இந்த அம்சம் இயக்கப்பட்டால், அறிவிப்பு மையத்தின் மேல் உள்வரும் அனைத்து அறிவிப்புகளையும் பெறுவீர்கள். இது தனிப்பட்ட சாட் மற்றும் குழுக்கள் இரண்டிற்கும் பொருந்தும். இருப்பினும், ‘உயர் முன்னுரிமை (High Priority)’ முடக்குவது உங்களுக்கு அறிவிப்புகள் கிடைக்காது என்று அர்த்தமில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தொலைபேசியின் அமைப்புகள் பிரிவில் செய்தியிடல் பயன்பாட்டிற்கான அறிவிப்பைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது.
iOS: லாக் ஸ்க்ரீனில் வாட்ஸ்அப் செய்தி முன்னோட்டத்தை எவ்வாறு முடக்கலாம்
ஸ்டெப் 1: உங்கள் ஐபோனில் வாட்ஸ்அப் பயன்பாட்டைத் திறந்து, திரையின் கீழ்-வலது மூலையில் அமைந்துள்ள அமைப்புகள் பிரிவைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: இப்போது, ‘அறிவிப்புகள்’ விருப்பத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 3: ‘முன்னோட்டத்தைக் காட்டு’ விருப்பத்தை முடக்கவும்.
இனி நீங்கள் புதிய வாட்ஸ்அப் செய்தியைப் பெறும்போதெல்லாம், உங்கள் எந்த செய்தியையும் யாரும் பார்க்க முடியாது. நீங்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், அறிவிப்பு அனுப்பியவரின் பெயரை “செய்தி” லேபிளுடன் மட்டுமே காண்பிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”