ஃபாஸ்டேக் கே.ஒய்.சி அப்டேட் இன்னும் செய்யவில்லையா? உடனே இப்படி செய்யுங்க; அரசு உத்தரவு

FASTag KYC Update: ஃபாஸ்டேக் கே.ஒய்.சி அப்டேட் செய்வதற்கான கடைசி தேதியை பிப்ரவரி 29,2024 வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

FASTag KYC Update: ஃபாஸ்டேக் கே.ஒய்.சி அப்டேட் செய்வதற்கான கடைசி தேதியை பிப்ரவரி 29,2024 வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
இனி வாட்ஸ்அப்பில்  FASTag ரீசார்ஜ் செய்யலாம்.. எப்படி தெரியுமா?
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் "ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டேக்" என்ற முயற்சியை அறிமுகப்படுத்தியது. இது பயனர்கள் பல கார்களுக்கு ஒரு FASTag ஐப் பயன்படுத்துவதிலிருந்தும் அல்லது ஒரே வாகனத்துடன் பல FASTagகளை இணைப்பதிலிருந்தும் தடுக்க கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஃபாஸ்டேக் உடன் கே.ஒய்.சி அப்டேட் செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்படி தற்போது ஃபாஸ்டேக் கே.ஒய்.சி அப்டேட் செய்வதற்கான கடைசி தேதியை பிப்ரவரி 29,2024 வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் கே.ஒய்.சி அப்டேட் செய்வது பற்றி பார்ப்போம். 

கே.ஒய்.சி அப்டேட் செய்வது எப்படி? 

Advertisment

1. https://fastag.ihmcl.com என்ற இணையதளப் பக்கம் சென்று நீங்கள் பதிவு செய்த மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்ட் பதிவிடவும். அல்லது ஓ.டி.பி கொடுத்து லாக்கின் செய்யலாம். 

2. இப்போது டாஷ்போர்டு சென்று இடது புறத்தில் உள்ள "My Profile"  ஆப்ஷன் கிளிக் செய்யவும்.
3.  அங்கு 'Profile' சப்-செக்ஷன் பக்கத்தில் 'KYC'  என்ற ஆப்ஷனை கண்டறிந்து கிளிக் செய்யவும்.
4.  அடுத்து "Customer Type." செலக்ட் செய்து அங்கு கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும்.
5. கட்டாய அறிவிப்பை டிக் செய்யவும்.  அவ்வளவு தான் உங்கள் விவரங்களைப் பெற்று ப்ராசஸ் செய்யப்படும். 7 
நாட்களுக்குள்  கே.ஒய்.சி அப்டேட் பற்றிய தகவல் தெரிவிக்கப்படும். 

கே.ஒய்.சி  ஸ்டேட்ஸ் அறிய.. 

கே.ஒய்.சி  ஸ்டேட்ஸ் அறிய  https://fastag.ihmcl.com என்ற பக்கம் செல்லவும். எப்போதும் போல் லாக்கின் செய்து கே.ஒய்.சி  ஸ்டேட்ஸ் விவரங்களைப் பெறலாம். 

Fastag

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: