இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் பிரபலமாக பயன்படுத்தும் சமூக வலைதளமாகும். குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். ரீல்ஸ், போட்டோ பில்டர்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் இளைஞர்களை கவரும் வகையில் உள்ளன. பலரும் இந்த செயலியைப் பயன்படுத்துகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனமும் புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இன்ஸ்டா ரீல்ஸ் டவுன்லோடு செய்ய வேறு ஆப் எதுவும் தேவையில்லை. மூன்றாம் தரப்பு செயலி ஏதும் பயன்படுத்தாமல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் டவுன்லோடு செய்யலாம். மூன்றாம் தரப்பு செயலி பயன்படுத்தும் போது உங்கள் தகவல்கள் சேகரிக்கப்படும். அதேசமயம் பல செயலிகளில் விளம்பரமும் இடம்பெறும். இந்நிலையில் மூன்றாம் தரப்பு செயலி ஏதும் பயன்படுத்தாமல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் டவுன்லோடு செய்வது குறித்து இங்கு பார்ப்போம். ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களிலும் இதை பயன்படுத்தலாம்.
- முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டாகிராம் செயலியை ஓபன் செய்து ரீல்ஸ் பிளே செய்யவும்.
- அடுத்ததாக ஷேர் ஐகானை கிளிக் செய்யவும்.
- இப்போது add reels to your story என்பதை கிளிக் செய்யவும்.
- அடுத்தது, வலப்புறத்தில் உள்ள 3 புள்ளி ஐகானை கிளிக் செய்து save கொடுக்கவும்.
- இப்போது ஸ்டோரியை discard செய்யவும்.
- அடுத்ததாக, நீங்கள் செலக்ட் செய்ய ரீல்ஸ் உங்கள் இன்ஸ்டாகிராம் folder-ல் டவுன்லோடு செய்யப்படும். அதை உங்கள் போன் கேலரி மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“