How to download movies from Netflix, netflix movies, netflix smart downloads, what is smart downloads, netflix, netflix downloads, how to download movies from netflix, netflic smart downloads, netflix movie download offline, நெட்ஃப்ளிக்ஸ், நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸ், இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்,
Watch Netflix Movies Offline : இப்போதெல்லாம் டிவிக்கான நேரங்கள் குறைந்துவிட்டது. ஆனாலும் படங்கள் பார்ப்பதற்கான ஆர்வம் ஒரு போதும் குறைந்துவிடுவதில்லை. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் ஹாட்ஸ்டாரில் நிகழ்ச்சிகளை பார்ப்பது தற்போது ஒரு பொழுது போக்கு அம்சமாகவே மாறிவிட்டது. நெட்ஃப்ளிக்ஸில் இருந்து படங்களை டவுன்லோடு செய்வது எப்படி என்று நீங்கள் வெகுநாட்களாக குழம்பிக் கொண்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்குத்தான்.
பொதுவாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் அனைத்து படங்களையும் டவுன்லோடு செய்வதற்கான உரிமையை வாடிக்கையாளர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் வழங்குவது கிடையாது. எந்தெந்த படங்கள் மற்றும் ஷோக்களை டவுன்லோடு செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முதலில் நீங்கள் நெட்ஃப்ளிக்ஸ் ஆப்பினை அப்டேட் செய்ய வேண்டும். பிறகு பாட்டம் ஸ்க்ரீனில் இருக்கும் டவுன்லோடு ஆப்சனை க்ளிக் செய்யவும்.
கம்மிங் ஸூன் என்ற ஆப்சனுக்கு அருகே டவுன்லோடு ஆப்சன் இருக்கும். எந்த படங்கள் மற்றும் சீரிஸ்களை டவுன்லோடு செய்து கொள்ள இயலும் என்பதற்கான பட்டியல்கள் அங்கே இருக்கும்.
அந்த படங்கள் மற்றும் சீரிஸ்களை நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ள இயலும். டவுன்லோடு செய்த படங்கள் மற்றும் ஷோக்களை நீங்கள் ஆஃப்லைனிலும் கண்டு ரசிக்கலாம்.
ஸ்டேண்டர்ட் அல்லது ஹை குவாலிட்டி வீடியோக்களை தங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு டவுன்லோடு செய்து கொள்ள இயலும். டேட்டாவை சேமிக்க வேண்டும் என்றால் ஸ்டேண்டர்ட் டைப்பில் படங்களை டவுன்லோடு செய்து சேமித்துக் கொள்ளலாம்.
ஸ்மார்ட் டவுன்லோடு ஆப்சன்
நெட்ஃப்ளிக்ஸில் ஸ்மார்ட் டவுன்லோடு ஆப்சனும் உள்ளது. அதன் மூலம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் சீரிஸின் அடுத்த எபிஸோடு தானகவே டவுன்லோடு ஆகத் துவங்கிவிடும். அதே நேரத்தில் பார்த்து முடித்த வீடியோவும் தானாக டெலிட் ஆகிவிடும். இந்த அப்சன் வைஃபை நெட்வொர்க்கில் நீங்கள் கனெக்ட் செய்திருந்தால் மட்டுமே செயல்படும்.