பைக், கார் என எல்லா வகையான வாகனங்களுக்கும் லைசென்ஸ், ஆர்.சி புக் கட்டாயம். ஆர்.சி புத்தகத்தில் வாகனம் மற்றும் உரிமையாளரின் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் வெளியில் செல்லும் போது ஆர்.சி புக் வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்தால் அதை ஆன்லையில் எளிதாக டவுன்லோடு செய்யலாம்.
அதற்கு, 1. டிஜிலாக்கர் இணையதளத்திற்கு செல்லவும் - https://www.digilocker.gov.in/ 2. டிஜிலாக்கர் தளத்தில் அக்கவுண்ட் இல்லை என்றால் ஆதார் கார்ட் வைத்து ஒபன் செய்யவும்.
3. அக்கவுண்ட் இருந்தால் ஆதார்/ மொபைல் எண் மற்றும் பின் நம்பர் போட்டு உள்ளே செல்லவும். 4. ஹோம் பக்கத்தில் Issued documents சென்று Get more issued documents ஆப்ஷன் கொடுக்கவும்.
5. இப்போது Ministry of Road and Transport ஆப்ஷன் கிளிக் செய்து ‘Registration of Vehicles’ பக்கம் செல்லவும். 6. அடுத்து உங்கள் வண்டியின் பதிவு எண் மற்றும் chassis number கொடுத்து சப்மிட் கொடுக்கவும்.
7. இதன் பின் Get Document ஆப்ஷன் கொடுத்தால் பி.டி.எஃப் வடிவில் ஆர்.சி புக் கிடைக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.