எஸ்.பி.ஐ எம்-பாஸ்புக் என்பது ஒரு எலக்ட்ரானிக் பாஸ்புக் ஆகும். இது உங்கள் பரிவர்த்தனை கணக்கு நடவடிக்கைகளைச் சேமிக்கவும், பதிவு செய்யவும் பயன்படும். எம்-பாஸ்புக் என்பது பாரத ஸ்டேட் வங்கியால் வழங்கப்படும் மொபைல் பாஸ்புக் ஆகும். இது இலவசமாகக் கிடைக்கிறது. கூகுள் ப்ளே அல்லது ஆப்பிள் ஸ்டோரில்
ஸ்டேட் வங்கி செயலியை இலவசமாக டவுன்லோடு செய்து எம்-பாஸ்புக் பயன்படுத்தலாம்.
ஸ்டேட் வங்கி செயலியில் எம்-பாஸ்புக் ஆஃப்லைன் அம்ச ஆப் ஆகும். இதன் மூலம் பயனர்கள் தங்கள் வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை எம்-பாஸ்புக் மூலம் ஆஃப்லைனில் பார்க்கலாம்.
எம்-பாஸ்புக் டவுன்லோடு செய்வது எப்படி?
1. முதலில் எஸ்.பி.ஐ வங்கி செயலியை டவுன்லோடு செய்யவும். பின்பு எம்-பாஸ்புக்கை ஆஃப்லைனில் பயன்படுத்த
பயனர் தங்கள் "யூசர்நேம்" மற்றும் "எம்-பாஸ்புக் பின்" ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
2. எம்-பாஸ்புக் லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம், "யூசர்நேம்" மற்றும் 4 இலக்க பின் நம்பரை உள்ளிட்டு “Submit” கொடுக்கவும்.
3. கணக்கு வைத்திருப்பர் டேட்டாவை sync செய்யும் முன் எம்-பாஸ்புக் பின் உருவாக்க வேண்டும்.
4. One-time activity ஆக State Bank Anywhere ஆப்-ல் லாக்கின் செய்யவும். அதில் கீழே உள்ள செட்டிங்க்ஸ் மெனுவிற்குச் செல்லவும் >>Create/Reset m-Passbook PIN கொடுக்கவும். அடுத்து, உங்கள் கணக்கின் m-பாஸ்புக்கினை sync செய்யும்.
அவ்வளவு தான் இப்போது இன்டர்நெட் இல்லாமல் ஆஃப்லைனில் பயன்படுத்த முடியும்.
5. லாக்கின் பக்கத்திலேயே 'm-Passbook' இணைப்பு தோன்றும். எம்-பாஸ்புக்கைப் பார்க்க பயனர்கள் இணைய வங்கிக் கணக்கில் உள்நுழைய வேண்டியதில்லை.
6. எனினும் பயனர் தங்கள் பின் நம்பரை மறந்துவிட்டால், அதே இணைப்பைப் பயன்படுத்தி புதிய பின்னை உருவாக்கலாம்.
7. பின்நம்பரை வெற்றிகரமாகச் சரிபார்த்த பிறகு, பயனர் தேர்ந்தெடுக்க பரிவர்த்தனை கணக்கு வழக்குகளை பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“