வாக்காளர் அடையாள அட்டை என்பது 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு வாக்களிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும். வாக்களிக்க இது முக்கிய அடையாள அட்டையாகும்.
ஒரு நபர் தனது வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்துவிட்டால், அவர் EPIC (வாக்காளர்களின் புகைப்பட அடையாள அட்டை) எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் மூலம் பெறலாம்.
ஆன்லைனில் ஓட்டர் ஐ.டி டவுன்லோடு செய்வது எப்படி?
1. National Voters Service Portal-க்கு செல்லவும்.
2. e-EPIC டவுன்லோடு ஆப்ஷன் கொடுக்கவும்.
3. அடுத்த கட்டமாக, நீங்கள் ஏற்கனவே உள்ள பயனராக இருந்தால் உள்நுழைவு விவரங்களை உள்ளிடவும் அல்லது மொபைல் எண்ணுடன் உங்களைப் பதிவு செய்யவும்.
4. உங்கள் EPIC எண்ணை உள்ளிடவும் (வாக்காளர் அடையாள அட்டையில் அச்சிடப்பட்ட 10 இலக்க பிரத்யேக எண்).
5. வாக்காளர் அடையாள விண்ணப்பப் படிவ எண்ணை உள்ளிடுவதற்கான ஆப்ஷனும் உள்ளது.
6. இப்போது விவரங்களை சரிபார்க்கவும்.
7. ஓ.டி.பி வரும் மொபைல் எண்ணை சரிபார்த்து அதில் லிங்க் அனுப்படும்.
8. அதை கிளிக் செய்து ஆன்லைனில் ஓட்டர் ஐ.டி டவுன்லோடு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“