ஆஃப் லைனில் பார்க்க யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?
சூரியனின் மேற்பரப்பு இப்படித்தான் இருக்குமா? ஆச்சரியமடைய வைக்கும் புகைப்படங்கள்! இந்தியாவில் அமேசான், கூகுளுக்கு சரியான போட்டியாக அமையுமா ஆப்பிள் ஹோம்பாட்?
உலகம் முழுவதிலும் மக்களுக்கு பிடித்த வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் YouTube ஒன்றாகும். கூகுளுக்கு சொந்தமான இந்த இயங்குதளம் அதன் பயனர்களுக்கு, வீடியோக்களை டவுன்லோட் செய்து சேமித்து வைத்து பின்னர் பார்க்கும் வசதியை கொடுக்கின்றது. இன்டர்நெட் இல்லாத நேரத்திலோ அல்லது இன்டர்நெட் வேகம் மிகக் குறைவாக இருக்கும்போ இந்த முறை பயனாளர்களுக்கும் பெரிதும் பயன்படுகிறது.
இருப்பினும், யூடியூப்பில் வீடியோ பதிவிறக்குவதற்கான ஆப்ஷன் இரண்டு வகையான பயனர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முதல் வகை பயனர்கள் யூடியூப் பிரீமியம் உறுப்பினர்கள் ஆவார்கள். இரண்டாம் நிலை பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வளரும் நாடுகளில் உள்ள யூடியூப் பயனர்கள் ஆவர். (படம்: ப்ளூம்பெர்க்)
உலகெங்கிலும் உள்ள 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் / பிராந்தியங்களில், பயனர்கள் சந்தா இல்லாமல் ஆஃப்லைன் பிளேபேக்கிற்கான YouTube வீடியோக்களை பதிவிறக்கம் செய்யலாம். இந்தியாவில் உள்ள யூடியூப் பயனர்களுக்கு, ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இங்குள்ள பயனர்களை பதிவிறக்கம் செய்யும் வீடியோக்களை ஆஃப்லைனில் பார்க்க யூடியூப் அனுமதிக்கிறது.
இணைய இணைப்பு மோசமாக இருக்கும்போது அல்லது இணைய இணைப்பு கிடைக்காதபோது பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்களை YouTube app மூலம் பார்க்கலாம். ஆஃப்லைனில் வீடியோ பார்ப்பதற்காக YouTubeலிருந்து வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி என்பதை , அடுத்த படத்தில் பட்டியலிடப்பட்ட முறைகளை பின்பற்றவும்.
YouTube app-ஐ ஓப்பன் செய்யவும் > நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் வீடியோவைத் தேர்வு செய்யவும் > வீடியோவின் தலைப்புக்கு கீழே உள்ள share மற்றும் save ஆப்ஷன்களுக்கு இடையில் இருக்கும் டவுன்லோட் ஆப்ஷனை தேர்வு செய்யவும் > வீடியோ தரத்தைத் தேர்வுசெய்க, அவ்வளவுதான். பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோ நீல நிற டிக்கை நீங்கள் காணும்போது, வீடியோ இப்போது ஆஃப்லைன் பார்வைக்கு ரெடி என்பது அர்த்தமாகும்.