தொலைந்த ஸ்மார்ட்போனை கூகிளில் தேடுவோம்

Now Find Lost Phone With Google Help: வீட்டில் தவறுதலாய் எங்கேயோ வைத்து தேடும்போது தான் நமக்கு இதயமும் அதற்கு ஒரு துடிப்பும் இருப்பது நமக்கு நியாபகம் வருகிறது.

By: July 30, 2019, 4:45:12 PM

Find Your Android Device With Google Account: இன்றைய காலங்களில் ஸ்மார்ட்போன் நம் வாழ்வில் முக்கியமான ஒன்றதாகிவிட்டது . ஏன் ? வீட்டில் தவறுதலாய் எங்கேயோ வைத்து தேடும்போது தான் நமக்கு இதயமும் அதற்கு ஒரு துடிப்பும் இருப்பது நமக்கு நியாபகம் வருகிறது . கிட்டத்தட்ட  ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த இதயத்துடிப்பை அனுபவித்து இருப்பார்கள்.

கூகிள்  உங்கள் தொலைந்த ஸ்மார்ட்போனைக் கண்டுபுடிக்க சில வழிமுறைகளை செய்துள்ளது .

முதலாவதாக, டேட்டா இணைப்பிலுள்ள உங்கள் ஸ்மார்ட்போனில் புவியிடங்காட்டி(ஜிபிஎஸ்) ஆன் செய்து உங்களுக்கான கூகிள்  கணக்கில் உள்நுழைந்திருக்க(சைன் இன்) வேண்டும் .

டெஸ்க்டாப்பிலிருந்து மீட்க :

 • உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள ஜிமெயிலில் உள்நுழைந்து முகப்புப்பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 • மேல் வலது மூலையில் உள்ள profile icon-க்கு செல்லவும்
 • கூகிள்   அக்கவுண்டைத் தேர்ந்தெடுக்கவும்
 • இடது புறத்தில் பட்டியலில் நான்காவதாக இருக்கும் பாதுகாப்பை(Security) தேர்வுசெய்க
 • உங்கள் சாதனங்கள் எனப்படும் பிரிவின் கீழ் இழந்த அல்லது திருடப்பட்ட தொலைபேசியைக் கண்டுபிடி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
 • நீங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கும் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும் (நீங்கள் இதுவரை எந்தெந்த சாதனங்களில் உங்கள் கூகிள்  கணக்கை வைத்து சைன் இன் செய்துள்ளீர்களோ அந்த சாதனத்தின் பட்டியலை நீங்கள் பார்த்திருப்பீர்கள்)
 • பின்பு உங்கள் ஜிமெயில்  கடவுச்சொல்லை உங்களிடம் கேட்கும் ஆகையால் பதிவுசெய்யுங்கள்.

ஸ்மார்ட் போனில் இருந்து மீட்க :

 • ஜிமெயில் செயலியைக் கிளிக் செய்யவும்
 • மற்றொருவர் தொலைபேசியிலிருந்து இந்த செயல்முறையை செய்தால் மற்றொரு கணக்கைச் சேர் என்ற பட்டனைத் தட்டவும் அல்லது உங்களுக்கு சொந்தமான இரண்டாவது தொலைபேசியிலிருந்து இந்த முயற்சியை செய்தால் கூகிள்  அக்கவுண்ட் நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்
 •  மேலே சென்று பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்க
 •  உங்கள் சாதனங்களுக்குச் சென்று தொலைந்து போன அல்லது திருடப்பட்ட தொலைபேசியைக் கண்டுபிடி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
 • உங்கள் சாதனத்தைத் தேர்வுசெய்க
 • பின்பு உங்கள் ஜிமெயில்  கடவுச்சொல்லை உங்களிடம் கேட்க்கும் ஆகையால் பதிவுசெய்யுங்கள்.

இந்த நடைமுறையை முடித்த பின்புதான் கூகிள்  உங்கள் ஸ்மார்ட்போனைக் கண்டுபிடிக்க சில விஷயங்களை செய்யத் தொடங்கும் .

லொகேட் பட்டனைத் தேர்ந்தெடுங்கள் அது கூகிள்  மேப்ஸ்க்கு சென்று உங்கள் ஸ்மார்ட் போன் தற்போது இருக்கும் coordinates ஐ கண்டுபிடிக்க வழிவகுக்கும்.

நீங்கள் மொபைல் இருப்பிடத்திற்கு அருகில் இருந்தால், ப்ளே சவுண்டைக் கிளிக் செய்யுங்கள் , அதன் பிறகு கூகிள்   உங்கள் சாதனத்தை ஐந்து நிமிடங்களுக்கு ஒலிக்கு வைக்கும் . அந்த  ஸ்மார்ட்போனை நீங்கள் அமைதி மோடில் போட்டிருந்தாலும் ஒலிக்க வைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

உங்கள் தொலைந்த ஸ்மார்ட் போனை லாக் செய்து பாதுகாப்பது பற்றி :

ஒருவேளை உங்கள் ஸ்மார்ட் போனின் இருப்பிடத்தை நீங்கள் மேலே சொல்லப்பட்டிற்கும் செயல்முறையின் மூலம் கண்டுபுடித்துவிட்டீர்கள் . இப்போது பொது வாழ்வில் இரண்டு விஷயங்கள் நடக்கும். ஒன்று,அதை உங்களிடம் திருப்பிக்கொடுக்க நினைக்கும் நல்ல குணம் படைத்த மனிதரிடம் சிக்கும் , அல்லது தன்னுடையதாக்கும் எதார்த்த மனிதரிடம் மாட்டும் . இந்த இரண்டு கோணங்களுக்கும் கூகிள்  வழிமுறை வைத்துள்ளது. உங்களது ஸ்மார்ட்போனில் எற்கனவே கடவுச்சொல் பின் இல்லாமல் இருந்தால் இப்போது நீங்கள் கடவுச்சொல்லைப் போட்டு மாற்று எண்ணிற்கான தகவலைக் கொடுத்து லாக் செய்யலாம். இதனால் நல்ல மனிதரிடம் சிக்கினால் மாற்று எண்ணின் தகவல் படித்து உங்களுக்கு அழைப்பு விடுப்பார். எதார்த்த மனிதரிடம் சிக்கினால் லாக் செய்த உங்கள் ஸ்மார்ட் போனை
பயன்படுத்த முடியாது.

சாதனத்தை அழிப்பது பற்றி : எல்லாம் தோல்வியுற்றால், ஸ்மார்ட் போனில் உள்ள எல்லா தகவல்களையும் அழிப்பதைத் தேர்ந்தெடுப்பதே சிறந்த வழி, இருப்பினும், உங்கள் டேட்டாவை நீங்கள் கூகிள்  back up செய்திருந்தால் , அதை நீங்கள் திருப்பி எடுக்க முடியும்.

சாதனத்தை அழித்துவிடு என்பதனை நீங்கள் தேர்தெடுத்தப் பின் உங்கள் ஸ்மார்ட் போனை இனி உங்களலால் லொகேட் செய்யமுடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும் .

கூகிள்   எனது சாதனத்தைக் கண்டுபுடி செயலி :

மேலே குறிப்பிட்டுள்ள செயல்முறைகளைத் தவிர, கூகிளின் எனது சாதனத்தைக் கண்டுபுடி என்ற செயலியைப் பதிவிறக்கலாம். இந்த செயலியின் தன்மைகள் கிட்டத்தட்ட ஜிமெயில் மீட்பு செயல்முறையை ஒத்தியே உள்ளது. ஜிமெயில் கணக்கில் உள்நுழைவதன் மூலமும் அல்லது கெஸ்ட் வசதியின் மூலமும் அந்த செயலிக்கி உங்கள் ஸ்மார்ட்போனைத் தேடும் அனுமதியை வழங்கலாம் . இந்த செயலியின் கூடுதல் நன்மைகள் என்னவென்றால் உட்புற வரைபட வசதிகளை நம்மால் அனுபவிக்க முடியும் . உங்கள் தொலைபேசியை விமான நிலையத்திலோ அல்லது மாலிலோ தொலைத்தால் இது மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை .

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:How to easily find lost phone with google

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X