மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த இன்ஸ்டண்ட் மெசேஜிங் செயலியைப் பயன்படுத்துகின்றனர். நிறுவனமும் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ்அப் எடிட் ஆப்ஷன் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது பீட்டா வெர்ஷன் அல்ல, அனைவரது பயன்பாட்டிற்கும் அறிமுகம் செய்துள்ளது. இது மிகவும் பயனுள்ள அம்சம் ஆகும். பயன்படுத்துவதற்கும் எளிதாக உள்ளது. அதாவது நீங்கள் மெசேஜ் அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் இந்த ஆப்ஷனைப் பயன்படுத்த வேண்டும். எழுத்து பிழையாக மெசேஜ் அனுப்பி இருந்தால் அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி பிழையை திருத்திக் கொள்ளலாம். 15 நிமிடங்கள் மட்டுமே இந்த ஆப்ஷன் எனேபிளாக இருக்கும்.
வாட்ஸ்அப் எடிட் எப்படி பயன்படுத்துவது?
முதலில் உங்கள் போன் வாட்ஸ்அப்-பை சமீபத்திய வாட்ஸ்அப் வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ளவும். கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் பிளே ஸ்டோர் சென்று அப்டேட் செய்யவும். அதன் பின் வாட்ஸ்அப் பக்கம் வர வேண்டும்.
புதிதாக மெசேஜ் அனுப்பியதில் தவறு இருந்தால், அந்த மெசேஜை லாங் பிரஸ் செய்தால் எடிட் என வரும் அதை செலக்ட் செய்து எடிட் செய்யலாம். வாட்ஸ்அப் தனி நபர் சாட், குரூப் சாட்களில் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம். எடிட் செய்யப்பட்ட மெசேஜ் அருகில் எடிட்டேட் என குறிப்பு காண்பிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“