/indian-express-tamil/media/media_files/zf3wEtVJSXwPtn3BlswD.jpg)
மைக்ரோசாப்ட் கோபைலட் ஏ.ஐ (Microsoft Copilot AI) ஆனது தற்போது பல்வேறு விண்டோஸ் 11 பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் AI-இயங்கும் chatbot-க்கான அணுகலுக்காக காத்திருக்கின்றனர். GPT-4-ன் large language model மூலம் இயக்கப்படும் கோபைலட் ஏ.ஐ விண்டோஸில் பல்வேறு பணிகளில் உதவி வழங்குகிறது.
டாஸ்க் பாரில் கோபைலட் பட்டன் பெறுவது எப்படி?
விண்டோஸ் 11 டாஸ்க் பாரில் ( taskbar) கோபைலட் பட்டன் கொண்டு வர செட்டிங்ஸ் ஆப் ஓபன் செய்து ‘Personalisation’ கிளிக் செய்யவும். இடப்புறத்தில் வரும் ஸ்கீரினில் டாஸ்க் பார் எனக் கொடுத்து ‘Copilot (Preview)’ என்ற ஆப்ஷனை கொடுக்கவும். இப்போது டாஸ்க் பாரில் கோபைலட் வந்துவிடும். இல்லை என்றால் ‘Windows + C’ என்ற கீபோர்ட் காம்பினேசனும் ட்ரை செய்யலாம்.
விண்டோஸ் 11 செட்டிங்ஸில் கோபைலட் இல்லை என்றால்?
நீங்கள் கீபோர்ட் shortcut பயன்படுத்தியும் Copilot ஐகான் வரவில்லை என்றால், நீங்கள் manual ஆகவே Copilot ஐகானை உருவாக்க வேண்டும்.
1. அவ்வாறு செய்ய, உங்கள் டெஸ்க்டாப்பின் காலியான பகுதியில் வலது கிளிக் செய்து, 'New' என்பதைக் கிளிக் செய்து, பின்னர் 'Shortcut' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து வரும் விண்டோவில் , microsoft-edge:///?ux=copilot&tcp=1&source=taskbar’ என்பதை பேஸ்ட் செய்யவும்.
3. கீழ் வலதுபுறத்தில் உள்ள ’Next’ என்பதை அழுத்தவும். shortcut-க்கு 'கோபிலட்' என்று பெயரிட்டு, ‘Finish’ பட்டனை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.