ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன், விண்டோஸ் போன்றவற்றில் அதிகம் பயன்படுத்தப்படும் தளங்களில் கூகுள் குரோம் பிரபலமான ஒன்றாகும். அதிக நேரம் குரோம் பயன்படுத்தும் போது தளத்தின் பிரகாசமான வயட் லைட் (Bright white light) கண் சோர்வையும், எரிச்சலையும் ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக இருட்டில் கூகுள் குரோம் பயன்படுத்தும் போது இது ஏற்படலாம்.
அப்போது நீங்கள் கூகுள் குரோம் டார்க் மோட் (Dark mode) அம்சத்தை பயன்படுத்தலாம். கூகுள் குரோம் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன், விண்டோஸ் போன்ற அனைத்து தளங்களிலும் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.
விண்டோஸில் டார்க் மோட் எனேபிள் செய்வது எப்படி?
விண்டோஸில் டார்க் மோட் எனேபிள் செய்வது மிகவும் எளிது. லேப்டாப், கம்ப்யூட்டரில் கூகுள் குரோம் டார்க் மோட் எனேபிள் செய்யலாம். அவ்வாறு செய்யும் போது டெக்ஸ்ட் வெள்ளை நிறத்திலும், background கருப்பு நிறத்திலும் இருக்கும்.
எனேபிள் செய்ய செட்டிங்க்ஸ் - Personalisation - ‘Colours’- ‘Choose your colour’ கிளிக் செய்து, ‘Dark’என்பதை செலக்ட் செய்யவும்.
டார்க் மோட் இல்லை என்றால் என்ன செய்ய?
வெப் சைட் பயன்படுத்தும் போது டார்க் மோட் இல்லை என்றால் குரேம் ஓபன் செய்து ‘chrome://flags’என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
இப்போது வரும் பக்கத்தில் ‘dark mode’ என்பதை search bar-ல் டைப் செய்யவும். ‘Auto Dark mode for web contents’ என்று அடுத்து வரும். இதை ‘Enabled with simple RGB based inversion’ என்று மாற்றி குரோம் ரீலாஞ் செய்யவும்.
ஆண்ட்ராய்டில் டார்க் மோட்
- உங்கள் ஆண்ட்ராய்டு போனில் கூகுள் குரோம் பக்கம் சென்று ‘chrome://flags’என டைப் செய்யவும்.
- அடுத்து வரும் பக்கத்தில் ‘dark’ என டைப் செய்யவும். இப்போது 2 ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். ‘Auto dark mode for web contents’ and ‘Darken websites checkbox in themes setting’.
- இதில் ‘Auto dark mode for web contents’ ஆப்ஷன் விண்டோஸ் வெர்ஷன் போன்று செயல்படும். ‘Enabled with simple RGB based inversion’எனக் கொடுத்து லாஞ் செய்யவும்.
ஐபோனில் டார்க் மோட்
ஐபோனில் டார்க் மோட் மாற்றுவது மிகவும் எளிது. ஐபோனில் system-wide dark mode எனேபிள் செய்தால் குரோமிலும் அது மாறிவிடும். இதற்கு செட்டிங்க்ஸ்- ‘Display’- ‘Appearance’ ஆப்ஷனில் ‘Dark’ எனக் கொடுத்து மாற்றலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.