New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/11/Whatsapp-whatsapp-1200.jpg)
How to enable disappearing messages in Whatsapp Android Ios web and Kaios
இந்த அம்சம் இயக்கப்பட்டிருந்தாலும், குறுந்செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டை பெறுநர் எடுக்கலாம் அல்லது குறுந்செய்தியின் நகலை வைத்திருக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
How to enable disappearing messages in Whatsapp Android Ios web and Kaios
Disappearing Messages Feature in Whatsapp Tamil News : வாட்ஸ்அப்பின் மறைந்துபோன செய்திகளின் அம்சம் (disappearing messages feature) இப்போது அனைவருக்கும் கிடைக்கும். எனவே, நீங்கள் இன்னும் அதனை அப்டேட் செய்யவில்லை என்றால் இப்போது முயற்சி செய்யலாம். ஆனால், ஏழு நாட்களுக்குப் பிறகுதான் செய்திகள் மறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், உங்களுக்காக “மறைந்துபோகும் செய்திகள்” அம்சத்தை மற்ற நபரும் இயக்கியுள்ளாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காணாமல் போன செய்திகளுக்கு நேரத்தை நிர்ணயிக்க நிறுவனம் இன்னும் ஆப்ஷன் கொடுக்கவில்லை.
ஊடகங்கள் மற்றும் செய்திகள், உங்கள் சாட்டுக்கு (chat) வெளியே இருந்தோ அல்லது அவை சேமிக்கப்பட்ட எந்த சாதனங்களிலிருந்தோ மறைந்துவிடாது என்று வாட்ஸ்அப் கூறுகிறது. இந்த அம்சம் இயக்கப்பட்டிருந்தாலும், குறுந்செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டை பெறுநர் எடுக்கலாம் அல்லது குறுந்செய்தியின் நகலை வைத்திருக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது. காணாமல் போகும் செய்திகளை இயக்குவதற்கு முன்பு அனுப்பப்பட்ட அல்லது பெறப்பட்ட செய்திகள் பாதிக்கப்படாது. இப்போது, நீங்கள் அதை எவ்வாறு இயக்கலாம் அல்லது முடக்கலாம் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
IOS, ஆண்ட்டிராய்டு மற்றும் வாட்ஸ்அப் வெப்பில் காணாமல் போகும் செய்திகளை எவ்வாறு இயக்குவது
ஸ்டெப் 1: உங்கள் ஆண்ட்டிராய்டு தொலைபேசியில் வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் இந்த அம்சத்தை இயக்க விரும்பும் நபரின் சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: சிறிது கீழே ஸ்க்ரோல் செய்து, மறைந்துபோகும் செய்திகள் (Disappearing messages) ஆப்ஷனை க்ளிக் செய்யவும். உங்கள் செயலியில் இந்த அம்சத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியாவிட்டால், புதுப்பிப்பு ஆப்ஷன் இருக்கிறதா என்று கூகுள் ப்ளே ஸ்டோரில் சரிபார்க்க வேண்டும்.
ஸ்டெப் 3 : வழிமுறைகளைப் படித்த பிறகு 'தொடரவும்' என்பதை க்ளிக் செய்யவும். இந்த அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான ஒரு சுருக்கத்தை வாட்ஸ்அப் உங்களுக்கு வழங்கும். 'மேலும் அறிக' என்பதைத் தட்டினால் கூடுதல் விவரங்களைப் பெறலாம். எல்லாவற்றையும் நீங்கள் அறிந்தவுடன், காணாமல் போகும் செய்திகளின் அம்சத்தை இயக்க “ஆன்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதனை முடக்க வேண்டுமென்றால் அதே செயல்முறையைப் பின்பற்றலாம்.
KaiOS-ல் வாட்ஸ்அப் செயலியில் காணாமல் போகும் செய்திகளைப் பயன்படுத்துவது எப்படி
ஸ்டெப் 1 : வாட்ஸ்அப் சாட்டைத் திறக்கவும்.
ஸ்டெப் 2 : விருப்பங்களை அழுத்தவும்> தொடர்பைக் காண்க> சரி.
ஸ்டெப் 3 : காணாமல் போகும் செய்திகளைத் தேர்ந்தெடுத்துத் திருத்து என்பதை அழுத்தவும்.
ஸ்டெப் 4 : கேட்கப்பட்டால், அடுத்து> சரி என்பதை அழுத்தவும். பிறகு, ஆன் என்பதைத் தேர்ந்தெடுத்து சரி ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.