வாட்ஸ்அப்: ஒரே அக்கவுண்ட் வெவ்வேறு போன்களில் பயன்படுத்துவது எப்படி?
How to enable WhatsApp on multiple Android devices: மெட்டாவின் புதிய அப்டேட்டில் ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை அதிகபட்சமாக 4 போன்களில் பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ளது.
How to enable WhatsApp on multiple Android devices: மெட்டாவின் புதிய அப்டேட்டில் ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை அதிகபட்சமாக 4 போன்களில் பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, பலரும் எதிர்பார்த்த வாட்ஸ்அப் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை 4 மொபைல் போன்களில் பயன்படுத்தும் படி அப்டேட் வெளியிட்டுள்ளது.
Advertisment
வாட்ஸ்அப் அக்கவுண்ட் இணைக்கப்பட்ட 4 சாதனங்களிலும் வாட்ஸ்அப் தனித் தனியாக இயங்கும். ப்ரைமரி சாதனம் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் மற்ற சாதனங்களில் பயன்படுத்தலாம். ஆனால் 15 நாட்கள் மேல் ப்ரைமரி சாதனம் இன்ஆக்டிவ் ஆக இருந்தால் மற்ற சாதனங்களில் வாட்ஸ்அப் தானாகவே log out ஆகிவிடும். நான்கு சாதனங்கள் என்பது 4 மொபைல் போன்களாக இருக்கலாம் அல்லது லேப்டாப், கணினியைக் கூட இணைத்து பயன்படுத்தலாம்.
இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் பயனர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இந்த அப்டேட் எவ்வாறு பயன்படுத்துவது?
முதலில் உங்கள் வாட்ஸ்அப்-பை சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும். அடுத்தாக secondary போனில் வாட்ஸ்அப் டவுன்லோடு செய்து ஓபன் செய்யவும். அதில் “agree and continue” கொடுத்து country code உடன் வாட்ஸ்அப் எண் பதிவிட வேண்டும். அடுத்தாக, வலப்புறத்தில் உள்ள 3 புள்ளி பட்டனை கிளிக் செய்து “link a new device” கொடுக்கவும்.
நடுவில் வாட்ஸ்அப் லோகோவுடன் பெரிய பார்கோடு காண்பிக்கும். இப்போது, உங்கள் ப்ரைமரி போனை எடுத்து அதில் வலப்புறத்தில் உள்ள 3 புள்ளி பட்டனை கிளிக் செய்து “linked devices” கொடுக்கவும். அடுத்து “link a new device” என்பதைக் கிளிக் செய்து, அங்கீகரித்து, பார்கோடை ஸ்கேன் செய்யவும்.
அவ்வளவு தான் இப்போது secondary போன்களிலும் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம். அதேசமயம் secondary போன்களில் வாட்ஸ்அப் லாக் அவுட் செய்ய “linked devices” சென்று லாக் அவுட் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“